தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் காயத்ரி என்ற மாணவி 3-ஆம் ஆண்டு கட்டுமான படிப்பு பயின்று வந்தார்.
விடுதியில் தங்கியிருந்த காயத்ரி காலை அதே வளாகத்தில் உள்ள நர்சிங் மாணவிகள் தங்கியுள்ள விடுதி கட்டிடத்தின் 3-வது மாடியிலிருந்து விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.
ஆனால், காயத்ரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ள பெற்றோர் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளனர்.