பெண்ணுக்கு மோசமான தண்டனை: வெளியான வீடியோ

இந்தியாவில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஒரு தலையாக காதலித்த பெண்ணை மக்கள் கட்டி வைத்து உதைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் பேட்டியா என்ற இடத்தில் தரூ என்ற மலைவாழ் இனத்தை சேர்ந்த பெண், ஒரு வீட்டின் முன்பு உள்ள தூணில் கட்டி வைக்கப்பட்டுள்ளார்.

அசைய முடியாத நிலையில் உள்ள அவரை, உள்ளூர் இளைஞர்கள் கடுமையாக அடித்து உதைக்கின்றனர்.

தாக்கப்பட்ட அந்த பெண் மற்றொரு இனத்தைச் சேர்ந்த வாலிபரை ஒரு தலையாக காதலித்து அவரது புகைப்படத்தை செல்போனில் வைத்திருந்துள்ளார்.

இதற்காக அப்பெண்ணை கட்டி வைத்து உதைக்குமாறு ஊர் பஞ்சாயத்தார் கூற தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தாக்குதல் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் இது குறித்து விசாரித்த பொலிசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.