கேரளாவில் காணமல் போன தங்கையை யாராவது பார்த்தால் தயவு செய்து தகவல் தெரிவியுங்கள் என்று கேரளா பெண் தமிழக மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜேஸ்னா. இவர் கடந்த மார்ச் மாதம் 22-ஆம் திகதி புஞ்சவாயல் பகுதியில் உள்ள தனது அத்தையின் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு கிளம்பியுள்ளார்.
சுமார் 20 கி.மீற்றர் தூரம் கொண்ட அந்த வீட்டிற்கு ஜேஸ்னா மூன்று பேருந்துகள் மாறி தான் செல்வார். அது போன்று தான் கடந்த மார்ச் மாதம் 22-ஆம் திகதி கிளம்பியுள்ளார்.
வீட்டை வீட்டு கிளம்பிய அவர் அத்தையின் வீட்டை அடையவில்லை.
இதனால் ஜேஸ்னாவின் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்துள்ளனர். 46 நாட்களாகியும் ஜேஸ்னாவை பொலிசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
அதுமட்டுமின்றி பொலிசார் ஜேஸ்னா சுய விருப்பத்தின் பேரிலேயே வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கலாம் என்று நம்புவதால், அவர்கள் ஜேஸ்னா விவகாரத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து ஜேஸ்னாவின் குடும்பத்தினர் கூறுகையில், ஜேஸ்னாவிற்கு பெரிய அளவில் எந்த நண்பர்களும் இல்லை. வீட்டிலும் பிரச்னை இல்லை. அப்படியிருக்க அவர் ஏன் வீட்டை விட்டுச் செல்ல வேண்டும். அவளை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் என அஞ்சுகின்றனர்.
இந்த விவகாரத்தில் பொலிசாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் தன் தங்கையை யாராவது பார்த்தால் தயவு செய்து தெரிவிக்கவும் என ஜேஸ்னாவின் சகோதரி தமிழக மக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.