செவ்வாய்க் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பியது நாசா!

நாசா சற்றுமுன் செவ்வாய்க்கிரகத்துக்கு விண்கலம் ஒன்றை வெற்றிகரமாக ஏவியது.

இன்சைட் என்று அழைக்கப்படும் அந்த விண்வெளிக்கலம் பிரித்தானிய நேரப்படி 12.05 மணிக்கு கலிபோர்னியாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

அதை அட்லஸ் V-401 என்னும் ராக்கெட் சுமந்து செல்கிறது. செவ்வாய்க்கிரகம் ஆராய்வதற்கு கடினமான ஒரு கிரகமாகும்.

மெல்லிய அதன் பரப்பினால் விண்கலங்களை இறக்குவது கடிமான ஒன்றாகவே உள்ளது.

மேலும் அங்குள்ள அதிக வெப்ப நிலையும் ஆய்வுகள் செய்வதற்கு கடினமான சூழலை ஏற்படுத்துகிறது.

இதுவரை செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலங்களில் 40 சதவிகிதம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த மிஷன் வெற்றி பெற்றால் செவ்வாய்க்கிரகத்தின் உள்பகுதியில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் தோராயமாக ஒரே காலகட்டத்தில் உருவான பூமியும் செவ்வாயும் ஏன் வித்தியாசமாக இருக்கிறது என்பதைக் குறித்தும் அறியலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இம்முறை சீஸ்மிக் அலைகளை செவ்வாய்க்கிரகத்தின் அடுக்குகளுக்குள் (வெளி அடுக்கு, மத்திய அடுக்கு மற்றும் உள் அடுக்கு) அனுப்புவதன் மூலம் அவை எவ்வளவு ஆழத்தில் உள்ளன மற்றும் அவை எதனால் ஆக்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம், அதாவது சாதாரண வார்த்தைகளில் சொல்லப்போனால் செவ்வாய்க்கிரகத்தை எக்ஸ் ரே எடுப்பது போல் என்று கூறலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.