மேதினக் கூட்டங்களுக்கு பொதுமக்களை ஏற்றிச் செல்வதற்காக பல்வேறு கட்சிகளும் 1500 பேருந்துகளை முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
வெசாக் கொண்டாட்டங்கள் காரணமாக இம்முறை மேதினக் கூட்டங்கள் 7ம் திகதிக்கு பிற்போடப்பட்டிருந்த நிலையில் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மேதினக் கூட்டங்களை கட்சிகள் ஏற்பாடு செய்துள்ளன.
இதற்காக பொதுமக்களை ஏற்றிச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் ஆயிரத்து ஐநூறு பேருந்துகள் தற்போதைக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றுக்கான கட்டணங்கள் முழுமையாகச் செலுத்தப்பட்ட பின்னரே பேருந்துகளை கட்சிகளின் தேவைக்காக கையளிக்குமாறு போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொதுமுகாமையாளர் பீ.எச்.ஆர்.சந்திரசிறி கண்டிப்பான உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.