சுற்றுலா பயணிகளுக்கு இலங்கையில் நேர்ந்த கதி!

மின்னேரியா தேசிய பூங்காவில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக காட்டு யானைகளை பார்வையிட பூங்காவிற்கு சென்றிருந்த வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் மிகுந்து சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதன்போது , சுமார் 100 ஜீப் ரக வாகனங்கள் கிரிஓய ஊடாக பயணிக்க முடியாத நிலையில் நேற்று பூங்காவினுள்ளேயே சிக்கிக் கொண்டன.

இதன் காரணமாக , சுற்றுலாப்பயணிகள் குறித்த பகுதியில் இருந்து நடந்தே வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.