இன்றைய ராசிபலன் (08/05/2018)

  • மேஷம்

    மேஷம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி கேட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: இரவு 7.15 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவு பூர்வமாக முடிவெடுக்கப்பா ருங்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிக்கலான, சவாலான காரியங்களை யெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

  • கடகம்

    கடகம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. இரவு 7.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவைப்படும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வீர்கள். பழைய பிரச்னை களைப் பேசி சுமூகமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • கன்னி

    கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.  உறவினர்களில் உண்மையான வர்களை கண்டறிவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கனவு நனவாகும் நாள்.

  • துலாம்

    துலாம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினை வுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். யோகா, தியானம் என மனம் செல்லும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரி ப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அனு பவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.

  • தனுசு

    தனுசு: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

  • மகரம்

    மகரம்: இரவு 7.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப் பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். மாலைபொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம்.சகோதர வகையில் பிணக்குகள் வரும். உத்யோகத்தில் மறைமுக தொந்தர வுகள் வரக்கூடும். இரவு 7.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • மீனம்

    மீனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இனிமையான நாள்.