சரத் பொன்சேகாவிற்கு ஐ.தே.கவிற்குள் எதிர்ப்பு!

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 6ம் திகதி நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் சரத் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

ஜனாதிபதியை விமர்சனம் செய்தமை குறித்து கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து கட்சியின் முக்கிய அமைச்சர்கள் சிலர் பிரதமரிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சரத் பொன்சேகாவின் நடவடிக்கை பிழையானது என்பதனை பிரதமரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோருமாறு சரத் பொன்சேகாவிற்கு பணிப்புரை விடுக்கப்பட உள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சரத் பொன்சேகாவின் கருத்து தொடர்பில் சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் ஐக்கிய தேசியக்கட்சி எவ்வாறான நடவடிக்கை எடுக்கும் என்பதனை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.