ஆண்களை மிரட்டி டேட்டிங் ஆப் மூலம் பணம் பறித்து வந்த இளம் பெண்!

இந்தியாவில் கொலை தொடர்பாக இளம் பெண்ணை விசாரித்ததில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெய்பூரைச் சேர்ந்தவர் துஷ்யந்த் ஷர்மா (27). தொழிலதிபரான இவருக்கு மொபைல் டேட்டிங் ஆப் மூலம் பிரியா சேத் (27) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார்.

துஷ்யந்த் ஷர்மா தன்னுடைய புரோபைலியில் தன்னுடைய வருமானம் கோடிகள் என குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்டவுடன் பிரியாவின் அவரிடம் அதிகமாக பேசி பழகியுள்ளார்.

இதனால் ஒரு கட்டத்தில் பிரியா தன்னுடைய அடுக்கு மாடி குடியிருப்பிற்கு வருமாறு அவரை அழைத்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த அவரை பிரியா தன்னுடை நண்பர்களுடன் சேர்த்து கட்டி வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரின் வீட்டிற்கு தொடர்பு கொண்டு 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அந்த பிளான் சொதப்பியதால், இவரை வெளியில் விட்டால் பிரச்சனையாகிவிடும் என்று எண்ணி தன் நண்பர்களுடன் சேர்ந்து உடலை துண்டு துண்டாக வெட்டி, ஒரு சூட்கேஸில் வைத்து அங்கிருக்கும் சாலை ஒன்றில் வீசிச் சென்றுள்ளனர்.

அதன் பின் இது தொடர்பாக பொலிசாரி பிரியாவை விசாரித்த போது தான் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரியா சேத்தின் தந்தை ராஜஸ்தானின் பாலியில் உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு கல்லூரி படிப்புக்காக பிரியா ஜெய்பூர் வந்துள்ளார். அப்போது ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக பார்ட் டைம் வேலைக்காக பேப்பரில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்துள்ளார்.

அப்போது பழக்கமான ஏஜெண்ட் ஒருவர் தான் பிரியாவிடம் நீங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதியை பாலியல் தொழிலுக்கு வாடகைக்கு விட்டால் வருமானம் குவியும் என்று கூற, இவரும் ஆசையில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அதே வேளையில் இறங்க ஆரம்பித்துவிட்டார்.

அதன் பின் கொள்ளை மற்றும் பணப் பறிப்பு என போன்றவைகளில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக டேட்டிங் ஆப் டேட்டிங் ஆப் மூலம் பல ஆண்களிடம் பழகி அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

டேட்டிங் ஆப் மூலம் பழக்கமாகும் ஆண்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வரும் பிரியா அதன் பின் அவர்களின் உடையை அவரே நீக்கிவிட்டு நெருங்கி நின்றபடி புகைப்படம் எடுத்துள்ளார்.

அதை வைத்து மிரட்டி பணம் பறித்துள்ளார். வெளியில் சொன்னால் அவமானம் என நினைத்து பலர் வெளியில் சொல்லவில்லை என பொலிசார் கூறியுள்ளனர்.