பேஸ்புக் நிறுவனத்திற்கு சிம்ம சொற்பனமாக விளங்கிய நிறுவனம் இழுத்து மூடப்பட்டது!

சமீபத்தில் பேஸ்புக் வலைத்தளம் மீதே உலகின் பார்வை திரும்பியிருந்தது.

இதற்கு காரணம் பயனர்களின் தகவல்கள் அவர்களின் ஒப்புதல் இன்றி கசிந்தமையாகும்.

இப் பிரச்சினைக்கு பிரதான சூத்திரதாரியாக இருந்த நிறுவனம் கேம்பிரிஜ் அனாலிட்டிக்கா ஆகும்.

கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த தகவல் திருட்டினை குறித்த நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

தற்போது இப் பிரச்சினை ஓரளவிற்கு தணிந்துள்ள நிலையில் கேம்பிரிஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் மூடப்படவுள்ளதாக கடந்த புதன் கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்நிறுவனம் Emerdata எனும் பெயரில் ஏற்கனவே மற்றுமொரு நிறுவனத்தினை ஆரம்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.