பொதுவாக நீரிழிவு நோய் உடலில் இன்சுலின் குறைவாக சுரப்பதால் தான் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை தற்போதைய அனைத்து வயதினருக்கும் வருகிறது.
இதனால் அவர்கள் உண்ணும் உணவுகளில் பெரிதும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியுள்ளது.
மேலும் அவற்றை கட்டுப்படுத்த இன்சுலின் ஊசிகள், சர்க்கரை இருக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருப்பது என்று இருக்கிறோம். ஆனால், அத்தகையவர்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது.
அதுதான் காரமான உணவுப் பொருட்களை உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அத்தகைய காரமான உணவுப் பொருட்கள் சில…
இலவங்கப்பட்டை :-
நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உணவு பொருட்களில் லவங்கப்பட்டை மிகவும் சிறந்தது. ஏனென்றால் இது உடலில் இருக்கும் குளுக்கோஸ் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.
நீரழிவு உடலில் குளுக்கோஸ் மெட்டபாலிச பிரச்சனையால் தான் வருகிறது. இந்த நேரத்தில் இன்சுலின் உற்பத்தி உடலில் குறைவதால், குளுக்கோஸ் குறைபாடு ஏற்படுகிறது.
இந்த உணவுப் பொருளில் மெத்தில் ஹைட்ராக்ஸில் பாலிமர் என்னும் பொருள் இருப்பதால், இது உடலில் இருக்கும் சர்க்கரையை உறிஞ்சி விடுகிறது.
சில உணவுகளில் லவங்கப் பட்டையை பொடி செய்து, சில இனிப்பு பொருட்களில் சேர்த்திருப்பார்கள். இதற்குக் காரணம் இதுவே.
கிராம்பு:-
இந்தப் பொருளில் லவங்கப்பட்டையை விட அதிகமாக பாலிஃபினால் இருக்கிறது. ஆனால் இதை லவங்கப்பட்டையை போல் அதிக அளவில் சாப்பிட முடியாது.
ஏனெனில் இது மிகவும் காரமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், அது பட்டையை விட மிகவும் சிறந்தது அல்ல. இது காரப் பொருட்களில் நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில், இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
மிளகு :-
நீரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடலில் முதலில் ஏற்படும் பிரச்சனை இரத்த ஓட்டம் தான். ஏனென்றால் அந்த ரத்த ஓட்டம் உடலில் இருக்கும் உறுப்புகளுக்கு மெதுவாக பாய்கிறது.
ஆகவே, மிளகில் இருக்கும் கேப்சியன், ரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதோடு, நீரிழிவு வருவதற்கான அறிகுறிகளை கட்டுப்படுத்துகிறது.
மஞ்சள் :-
மஞ்சள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, சமன் செய்கிறது. நீரழிவு இருந்தால் ரத்தத்தில் அதிகமான அளவு சர்க்கரை இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, விரைவில் நோயானது தோற்றிவிடுவதோடு, அது சரியாக நீண்ட நாட்கள் ஆகிவிடும்.
ஆனால் மஞ்சளில் நோய் எதிர்ப்பு பொருள் அதிகம் இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது ஒரு காரமில்லாத நீரழிவை கட்டுப்படுத்தும் உணவுப் பொருளாகும்.