யாழ்ப்பாண பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம் கொண்டு வந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு பெண்களின் கைப்பைகளிலும் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என விமான நிலைய சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.