நம்ம விளையாட்டு பையன் ஆர்யாவுக்கு திருமணம் நிகழவுள்ளது என்றே எல்லோரும் சந்தோசப்பட்டிருந்த வேளை அதுவும் நடக்காமல் போனது அனைவரும் அறிந்ததே.
ஆர்யாவுக்கு பெண் பார்ப்பதற்காக ஜெய்ப்பூரில் பிரமாண்ட அளவில் சுயம்பரமே நடந்திருந்தது. அந்தளவு ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ரசித்து பார்த்த நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிளை.
இறுதியில் ஆர்யாவின் அந்த முடிவு அனைவரது எதிர்பார்ப்பையும் தூக்கிவாரிப்போட்டது. இருந்தாலும் பின்னர் பார்த்த நேர்காணல்களில் இது திட்டமிடப்பட்ட முடிவு அல்ல.
ஆர்யாவின் நல்ல மனசு தான் அவரை இந்த முடிவு எடுக்க வைத்தது என்று சொல்லுமளவு அவரை பற்றி போட்டியாளர்களும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை சங்கீதாவின் பேட்டிகளில் இருந்தும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டுப் பெண் அபர்ணதியை யாரும் இலகுவில் மறந்து விட முடியாது. தனது போல்ட் ஆனா சுபாவத்தால் அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட போட்டியாளராக மாறினார்.
இறுதிப்போட்டிக்கு முன்னதாக எலிமினேட் செய்யப்பட்டிருந்தார். இவரின் அதீத காதல், ஆர்யா மேல் வைத்திருந்த பாசம், இவர் எலிமினேஷனின் போது கதறி அழுதது என ஆர்யாவை பின்னர் வாட்டி வதைத்தது. இதனால் தான் ஆர்யா எந்த முடிவையும் அறிவிக்காமல் விட்டதாகவும் முன்னர் கிசு கிசுக்கப்பட்டது.
இதுஇவ்வாறிருக்க, அபர்ணாதி சமீபத்தில் LIVE இல் வந்து தனது ரசிகர்களை சந்தித்தார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறினார்.
அதில் ஒரு ரசிகர், நீங்கள் போட்டி தொடங்கும் போது எவ்வாறு இந்நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்திருந்தீர்கள் எனக் கேட்க, அபர்ணதி தனது விருப்பத்தை ஒரு காணொளியாக அனுப்பி இருந்ததாகவும், அதில் தனது காணொளியை ஒரு தடவை பார்த்தவுடனேயே ஆர்யா தன்னை தேர்ந்தெடுத்தாகவும் பின்னர் நிகழ்ச்சியின் போது என்னிடம் கூறி இருந்தார். உனது காணொளியை நான் இருபது தடவைக்கு மேல் பார்த்து ரசித்தேன் என்று ஆர்யா கூறியிருந்ததாக அபர்ணதி கூறினார்.