உடலுக்கு வயதாகி கொண்டே போகிறது என்பதை காட்டும் அறிகுறிகளில் கைகளே முதன்மை வகிக்கிறது.
முதுமையின் அறிகுறி மட்டுமல்ல உடலில் ஏற்படும் சில ஆரோக்கிய குறைபாடுகளையும் கைகளில் உள்ள ஒரு சில அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
சிவந்த கைகள்
சிவந்த கைகள் கொண்டிருந்தால் , அது உடல் நலக் குறைவுக்கான அறிகுறி.
இது போன்ற சிவந்த உள்ளங்கைகள் கல்லீரல் நோயின் ஆரம்ப காலமாக இருக்கலாம். உடலில் ரத்த சர்க்கரை குறைபாட்டை ஏற்படுத்தும் ஹார்மோன் சமமின்மை காரணமாக இந்த சிவப்பு தன்மை ஏற்படுகிறது. பொதுவாக உள்ளங்கையின் வெளிவட்டங்களில் இந்த சிவப்பு தன்மை காணப்படும்.
உங்கள் உள்ளங்கைகள் இதுபோல சிவப்பாக இருந்தால் நீங்கள் மருத்துவரிடம் சென்று அதன் காரணத்தை கண்டறிதல் நல்லது.
வியர்க்கும் உள்ளங்கைகள்
நம்மில் ஒரு சிலருக்கு உள்ளங்கை மட்டும் வியர்த்துக் கொண்டே இருக்கும். அடிக்கடி கைக்குட்டை நனைந்து போகும். யாரிடமும் கைகுலுக்க கூச்சமாக இருக்கும். இந்த உள்ளங்கை வியர்தலுக்கான காரணம் இயற்கையாகவே அதிகமாக சுரக்கும் வியர்வை சுரப்பிகள், அதிக மன அழுத்தம், அதிகமாக சுரக்கும் தைராய்டு சுரப்பிகள் ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.
உணவில் உப்பின் அளவை குறைப்பது மற்றும் மது பழக்கத்தை கைவிடுவது மேலும் சுவாசப்பயிற்சி செய்வது இதன் மூலம் இந்த வியர்வையை குறைக்க முடியும். அப்படியும் குறையாத போது மருத்துவரை நாடுவது அவசியம்.
கைகளின் உணரும் திறன் குறைந்து போதல் மற்றும் கூச்ச உணர்வு இழத்தல்
சில சமயம் நாம் காலையில் எழும்போது நம் கைகள் இருப்பதை நம்மால் உணர முடியாது. அது பற்றி யோசிக்கும்போது மேலும் கைகளுக்குள் கூச்சம் போன்ற உணர்வு ஒற்றை நரம்பில் ஏற்பட்டு உடல் முழுதும் பரவும்.
இது ஒரு சாதாரண அறிகுறி அல்ல .ஆஸ்டியோக்நோண்டிரோசிஸ், கார்ல்பல் டன்னல் நோய்க்குறி ஆகும். மூட்டுக் குழாயின் சிரை இரத்தக் குழாய் போன்றவை, வலுவான பின்னூட்டு காயம், அனீமியா அல்லது நீரிழிவு போன்ற ஒரு மிகப்பெரிய பிரச்சனைக்கு அடையாளமாக இருக்கலாம். இது போன்ற நேரங்களில் நீங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம் ஆகும்.
வறண்ட உள்ளங்கை
பெரும்பாலும் வறண்ட உள்ளங்கைக்கான காரணமாக கூறப்படுபவை நீரிழிவு மற்றும் ஈஸ்ட்ரோஜென் குறைபாடுகள் ஆகியவைதான்.
பெண்களுக்கான மெனோபாஸ் பிரச்னைகள் இதனோடு உடன் வரும். இதை தவிர்க்க உணவில் மீன் எண்ணெய் சத்துக்கள் மற்றும் பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு போன்றவை மற்றும் அத்திப்பழ விதைகள் போன்றவற்றை சேர்த்து கொள்ளவேண்டும்.
தேவைப்படின் ஹார்மோனல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் அதன் மூலம் ஈஸ்ட்ரோஜென் குறைபாடு நீங்கும்.
கை நடுக்கம்
பார்கின்சன் எனப்படும் கொடிய வியாதிக்கான அறிகுறியாக இந்த கை நடுக்கம் பார்க்கப்படுகிறது.
இது பற்றிய பயம் உங்களுக்கு ஏற்பட்டால் அவசியம் மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்ளவும். இதற்கு நடுவில் உங்களது காபி மற்றும் மது பழக்கங்களை அறவே நிறுத்த முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் கை நடுக்கத்திற்கு இவையும் ஒரு காரணம். பார்க்கின்சன் நோய்க்கான முக்கிய காரணங்களாக மனக்கவலை, மன அழுத்தம் போன்றவை பார்க்கப்படுகின்றன.
பலவீனமான நகங்கள்
பலவீனமான நகங்கள் மற்றும் விரிசல்கள் உடைய நகங்கள் உடலில் துத்தநாக குறைபாட்டின் காரணமாக ஏற்படலாம். துத்த நாகம் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. காயங்களை ஆற்றுவதற்கும், நோயெதிர்ப்பு தன்மையை அதிகரிப்பதற்கும் துத்தநாகம் உதவி செய்கிறது.
இதனை அதிகரிக்க இறைச்சி மற்றும் பாதாம் பிஸ்தா போன்ற வகைகள் , மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை எடுத்து கொள்வது அவசியம்.
விரல் நுனி வீக்கம்
உங்கள் விரல்கள் முருங்கைக்காய் போல அதன் நுனிகளில் வீங்கி காணப்படும். நகமும் அதனை ஒட்டியுள்ள சதையும் வீங்கி இருக்கும். இது போன்று இருந்தால் உடலில் ஆக்சிஜென் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். இது இதய நோய் அல்லது நுரையீரல் புற்று நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம். ஆகவே இவர்கள் உடனடியாக மருத்துவரை சந்திப்பது அவசியம்