கோடையின் ஆரம்பத்தை நாம் பொதுவாக ரோட்டோரங்களில் குவியல் குவியலாக விற்பனைக்காக காத்து கிடக்கும் தர்பூசணி பழங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கோடைக்கும் தர்பூசணிக்கும் அப்படி ஒரு ஒற்றுமை.
இந்த தர்பூசணியை அதன் சீசன் நேரங்களில் பயன்படுத்தி அதன் மூலம் உடல் எடையை வெகு எளிதாக குறைக்க முடியும்.
தர்பூசணி டயட்டானது உடல் பருமனை மட்டுமல்லாமல் நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களில் இருந்தும் காத்து வருகிறது. உடலில் உள்ள நச்சு தன்மையை நீக்கும் இயல்பு தர்பூசணிக்கு உண்டு .
இந்த தர்பூசணி டயட் எடுத்து கொள்வதன் மூலம் நாம் பசியை பொறுத்து கொள்ள தேவையில்லை. சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறையும் தன்மை ஏற்பட்டு விடும்.
இதில் பழங்களுக்குண்டான விட்டமின்கள், தாது பொருட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. குறைந்த கலோரி மற்றும் அதிக நீர் சத்து உள்ளதால் உடல் எடை குறைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
சமசீர் உணவு தேடுபவர்களுக்கு தர்பூசணி ஏற்றதாகும். உடல் எடையினை குறைத்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்தவர்கள் தினமும் காலை மற்றும் இரவில் தர்பூசணியை உணவாக எடுத்துக் கொண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தர்பூசணி மூலம் உடலில் உள்ள அசுத்தங்கள் நச்சுத்தன்மை மற்றும் அதிகப்படியான உப்பு ஆகியவை நீங்கி உடல் ஆரோக்கியம் தரும்.
தினமும் உங்கள் எடையின் 10 சதவிகிதம் தர்பூசணி உண்டு வந்தால் விரைவான பலன்களை பெற முடியும். அதாவது நீங்கள் 60கிலோ எடையில் இருந்தால் நாளொன்றுக்கு 6 கிலோ தர்பூசணி வரை சாப்பிடலாம் தவறில்லை.
ஒரு நாளைக்கு எட்டு முறையாக பிரித்து தர்பூசணியை சாப்பிட்டு வர வேண்டும். இப்படி செய்வதால் எட்டு கிலோ வரை எடை குறைப்பு ஏற்படுகிறது
100கிராம் தர்பூசணியில் 7கிராம் சர்க்கரை உள்ளது. 32கலோரி எனர்ஜியும் உள்ளது. தர்பூசணியில் நீர் அதிகமாக இருப்பதால் அதிகம் நீர் அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
இந்த தர்பூசணி டயட்டை ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை மட்டுமே எடுக்க வேண்டும். அதிகம் சாப்பிடும்போது எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம்.
இந்த டயட் எடுத்துக்கொள்ளும்போது கடினமான உடற்பயிற்சிகளை தவிர்க்கவும்.
யாரெல்லாம் தர்பூசணி டயட் சாப்பிட கூடாது. கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் இந்த டயட்டை எடுத்து கொள்ள வேண்டாம். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் இந்த டயட்டை தவிர்க்கவும்.