இரணைதீவில் கடற்படையின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நிலமீட்பு போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்திக்க இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்கள் சென்றிருந்தனர்.
இதன்போது மக்களிற்கு தேவையான உலருணவும் கொண்டு சென்றனர்.இந்த பயணத்தின்போது துப்பரவு கருவிகளையும் கொண்டு சென்று, மக்களின் நிலங்கையும் துப்பரவு செய்தனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் போன்றவர்கள் புல்லுவெட்டும் கருவியை பாவித்து புல்லுவெட்டும் படங்கள் வெளியானதையடுத்து, அவை இணையத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.