காலா போன்ற காளான்கள் காணாமல் போகும் – அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் பாடல் வரிகள் குறித்த கேள்விக்கு, காலா போன்ற காளான்கள் காணாமல் போகும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மே 9-ஆம் தேதி) மாலை நடைபெற இருக்கிறது.

201805091436023466_1_kaala-2._L_styvpf  காலா போன்ற காளான்கள் காணாமல் போகும் - அமைச்சர் ஜெயக்குமார் 201805091436023466 1 kaala 2ஆனால், இன்று காலை 9 மணியளவில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இதன் பாடல்களை வெளியிட்டார். இந்த பாடல்கள் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால், அரசியலுக்கு எதிரான பாடல் என்று சிலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இப்பாடல்கள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, ‘காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. திரைப்படம் மூலம் மக்களை தூண்டிவிட நினைத்தால் அரசு ஏற்றுக்கொள்ளாது. ‘காலா’ போன்ற காளான்கள் காணாமல் போகும்’ என்றார்.