பிரகதி காதல் திருமணம் செய்யப் போவது இந்த நடிகரையா?

தமிழ்நாட்டில் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணான பிரகதி தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறார்.

இசை நிகழ்ச்சிகள், இசை ஆல்பம்கள், மற்றும் பின்னணி பாடகி என ரொம்ப பிசியாக இருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.

இந்நிலையில், இவர் தமிழில் தெகிடி என்ற படத்தில் நடித்த நடிகர் அசோக் செல்வனை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.

இதனால், நெட்டிசன்கள் அனைவரும் பிரகதி நடிகர் அசோக் செல்வனை காதல் திருமணம் செய்ய இருப்பதாக அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.