அமெரிக்காவின் நிவ்யோர்க் முன்னாள் சட்டமா அதிபர் ஒரு மிருகம் போன்று கொடியவர் என, இலங்கை பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
பெண்களை துன்புறுத்திய நிவ்யோர்க் சட்டமா அதிபர் எரிக் ஸ்னெய்டர்மென் குறித்து அவரது காதலியான தான்யா செல்வரத்னம் தெரிவித்துள்ளார்.
இலங்கை சேர்ந்த தான்யா செல்வரத்னம், சட்ட மாஅதிபர் அலுவலத்தில் நடந்த விசாரணையின் போது இந்த தகவலை வெளியிட்டார்.
ஸ்னெய்டர்மென் நாளொன்றுக்கு அளவுக்கு அதிகமாக வைன் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டிற்கமைய வழக்கு தாக்கல் செய்ததாகவும், அதற்கு எதிராக ட்ரம்பும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஹிலாரி கிளின்டனும் தொடர்பு வைத்திருந்ததுடன், தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட கேக்கினை கூட வெட்ட இடமளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்னெய்டர்மென் அதீத ஆசை கொண்ட ஒருவர் எனவும், அவர் தன்னை தாக்கியமையினால் தான் வைத்தியசாலையில் அனுமதிக்க நேரிட்டதாக தான்யா செல்வரத்னம் மேலும் தெரிவித்துள்ளார்.
பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தான்யா செல்வரத்னம் உள்ளிட்ட நான்கு பெண்கள், ஸ்னெய்டர்மென்னுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து நிவ்யோர்க் நகர சட்ட மாஅதிபரும், அமெரிக்காவின் சமகால ஜனாதிபதியின் கொள்கை ஆலோசகருமான எரிக் ஸ்னெய்டர்மென் பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.