ஒரு வேளை உங்களது வீடு தீய சக்தி நிரம்பி இருக்கின்ற போது அவை எதிர் மறையான விளைவுகளை மாத்திர மின்றி உடல், உணர்வு பாதிப்புக் ளையும் ஏற்படுத்தக் கூடும்.
உண்மையில் நீங்கள் உங்களின் வெறும் கண்களால் அவற்றை அவதானிக்க இயலாது. ஆனால் உங்களில் உணர்வுகளின் நிலைப்பாடு மூலம் அவை பிரதி பலித்துவிடும் என்பது உண்மை.
இவற்றால் உங்களின் கற்பனையை இலகுவாகக் குறைக்கலாம் உங்கள் நம்பிக்கையை அழிக்கலாம். உங்களின் மதிப்பை குறைக்கும். அதேபோல் உங்களின் திறமையையும் நலிவடையச் செய்யும்.
இது மட்டு மின்றி இந்த எதிர்மறை சக்திகள் பல்வேறு குடும்ப தொந்தரவுகளையும் ஏற்படுத்தும். இவை குடும்ப உறவு களுக்கிடையில் பிணக்குகளை ஏற்பதிலும் பங்களிப்பு செய்யும்.
இதன் விளைவாக நீங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றங்களையும் அனுபவிக்க நேரிடும். துரதிருஸ்டமாக உங்களின் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் இது போன்ற எதிர்மறையான சக்திகளை அழிக்க மிகவும் கடினமாக இருக்கும்.
ஆக ஒரு மகிழ்ச்சியான மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ நீங்கள் இந்த எதிர்மறை சக்திகளின் ஆற்றலை குறைக்க வேண்டும்.
உங்கள் வீட்டில் எதிர்மறையான ஆற்றல் இருக்கிறதா? என்பதை கண்டறிய கீழே உள்ள அம்சங்களை பாருங்கள்
நீங்கள் அதிகபடியான விபத்துக்கள் உடல் நலக் குறைபாடு, வாதங்கள், இழப்புக்கள் அல்லது பொருள்கள் உடைதல் போன்றவற்றை கவனித்திருந்தால் இந்த எதிர்மறையான சக்திகளை அழிக்க வேண்டிய தேவை ஏற்படும்.
இது தவிர எதிர்மறை ஆற்றல் உங்களின் வீட்டில் அல்லது உங்கள் பிரச்சினைகளில் சோர்வை தூண்டினால் அதனை கண்டுபிடிக்க பல வழிகள் உண்டு.
கீழே , அவ்வாறான சக்திகள் உங்களது வீட்டில் உள்ளதா? என்பதை கண்டறிய சில இலகுவான வழிகள் உள்ளன.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு வெளிப் படையான கண்ணாடி குவளையைப் பயன்படுத்த வேண்டும் அவற்றில் எந்த வித வெட்டுக்களோ அல்லது கீறல்களோ இருக்கக் கூடாது.
ஆனால் நீங்கள் அதே கண்ணாடியை மீண்டும் பயன் படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்,
01. ஆரம்ப்பிப் பதற்கு நீங்கள் ஒரு வெளிப் படையான கண்ணாடி குவளை அல்லது ஒரு நீர் கொள் கலன் எடுத்து கொள்ள வேண்டும்.
02. பின் உப்பைச் சேர்க்க வேண்டும். அதில் 3 இல் 1 பகுதியை நிரப்ப வேண்டும் என்பதில் கவனமாக இருத்தல் அவசியம்.
03. அதன் பிறகு, உயர் தர அப்பில் சீடர் வினாகிரி, வெள்ளை வினாகிரி தேவை. அவை கண்ணாடியில் 3 இல் 2 பகுதி நிரப்புதல் அவசியம்.
04. எதிர்மறை ஆற்றல் , அதிர்வு உள்ள அறையில் சில தூய நீரைச் சேர்க்க வேண்டும்.
05. குறைந்தது 24 மணிநேரம் இருக்கும் வகையில் விட வேண்டும். யாரும் அதனை நகர்த்த கூடாது என்பது முக்கியம்.
06. பின் கண்ணாடியில் காணப்படும் திரவத்தின் நிலையைக் கவனிக்கவும். திரவத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை என்பதை அவமானித்தால் இங்கு எதிர்மறையான ஆற்றல் இல்லை
என்பது திண்ணம். அவ்வாறில்லாமல் , ஒருவேளை அந்த குவளை பச்சை நிறமாகவும் அல்லது புழுக்கமான நிறத்தைக் கொண்டிருந்தால் அந்த அறையில் எதிர்மறையான ஆற்றல் உள்ளது என்பது உறுதி.
இறுதியில் நீங்கள் கழிவறை குவளையில் நீர் ஊற்ற வேண்டும்.
பின் நீர் ஓட்டத்தைச் செலுத்த வேண்டும். கண்ணாடி குவளையை முழுமையாகக் கழுவ வேண்டும்.
மேலும், தேவையேற்படின் அம்முறையை மீண்டும் பயன்படுத்தலாம். அதே குவளையை மறுபடியும் பயன்படுத்த வேண்டாம்.
சிறிது பின், உங்கள் வீட்டில் நேர் மறையான ஆற்றல் உண்டு என்பதை உணர்வீர்கள்.