மனதில் நினைப்பதை பிரமிக்க வைக்கும் வகையில் உடனுக்குடன் எழுத்து வடிவில் மொழிபெயர்க்கும் இயந்திரமொன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்க கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான டேவிட் மோசஸ் தலைமையிலான குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ள மேற்படி இயந்திரம் தொடர்பான விபரங்கள் ஆய்வறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இயந்திரம் ஒருவர் மனதில் நினைப்பதை 90 சதவீதம் அல்லது அதற்கு அதிகமான சதவீதத்தில் சரியாக எதிர்வு கூறும் வல்லமையைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த இஷயந்திரம் மூளை நரம்புகளிலிருந்து வெளிப்படும்
சமிக்ஞைகளை வசனங்களாக மாற்றி காட்சிப்படுத்துகிறது.
இந்த நிலையில் மேற்படி இயந்திரம் ஒருவர் இரகசியமாக பேண விரும்பியவற்றையும் திரையில் தவறுதலாகக் காட்சிப்படுத்தும் வாய்ப்புள்ளதால் தனிநபர் அந்தரங்கத்தன்மையை பாதுகாக்கும் நெறிமுறை மீறப்படும் அபாயமுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.