ஸ்கூட்டியில் குட்டைப்பாவாடையில் போன யாழ் யுவதி நையப்புடைப்பு!!

யாழ் உரும்பிராய்ப் பகுதியல் உள்ளாடைகள் தெரியுமாறு குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தொலைபேசி கதைத்துக் கொண்டு சென்ற இளம் பெண் ஒருவர் இனந்தெரியாத இரு இளைஞர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். குட்டைப் பாவாடை போடுவியா? போடுவியா? எனக் கேட்டே யுவதி மீது தாக்கதல் நடத்தப்பட்டதாக தெரியவருகின்றது.

தொலைபேசியில் கதைத்தபடி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த யுவதியின் தொலைபேசியை தட்டி விழுத்திய பின்னர் யுவதியை மோட்டார் சைக்கிளிலிருந்து இறக்கியே தாக்குதல் நடாத்தியுள்ளார்கள். இதனையடுத்து வீதியில் சென்ற பொதுமக்கள் யுவதியை ஆறுதல்படுத்தி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக யுவதி பொலிசாரிடம் முறைப்பாடு செய்யவில்லை எனத் தெரியவருகின்றது.