இவ்வளவு விஷயம் இருக்கா இந்த ஒரு பொருளில்? அடிக்கடி குடிங்க!

சவ்வரிசி பாயாசம் சுவையில் மட்டும்மல்ல இதன் ஆரோக்கிய நன்மைகளும் சாலச் சிறந்தது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், வயிற்று போக்கு தடுத்தல், எலும்பு வலிமை, ஆற்றல், சீரான உடல் மெட்டா பாலிசம் போன்ற எண்ணற்ற நன்மைகளை அள்ளித் தருகிறது.

தயாரிக்கும் முறை

அரிசி மாவு, பசையுள்ள மாவு மற்றும் கோதுமை மாவு போன்றவற்றை அவற்றின் மூலப் பொருட்களிலிருந்தே தயாரிக்கின்றனர்.

ஆனால் சவ்வரிசியை தயாரிக்க ஏராளமான செயல்முறைகளை செய்ய வேண்டியிருக்கிறது. 15 வயதை அடைந்த பனைமரத்தின் தண்டு தேவைப்படும் அல்லது ஒரே ஒரு முறை பூத்த பனைத் தண்டு தேவைப்படும்.

தண்டின் கடினமான தோலை நீக்க வேண்டும். இப்பொழுது அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அரைக்கும் மிஷினில் செலுத்த வேண்டும். வரிசையாக அதில் அடுக்கி வைத்து அனுப்பும் போது அது மரத்தூளாக வெளியே வரும். இப்பொழுது அதன் மேல் தண்ணீர் சேர்த்து நார்ச்சத்து மற்றும் ஸ்டார்ச் இரண்டையும் தனியாக பிரிப்பார்கள்.

பிளாஸ்டிக்கை பயன்படுத்தி ஸ்டார்ச்சை மட்டும் தனியாக வடிகட்டி விடுவார்கள். நன்றாக 2-3 முறை கசடுகளை வடிகட்டி ஸ்டார்ச்சை சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு உலர வைத்து பொடியாக மாற்றி எடுத்து கொள்ளுங்கள்.

இந்த ஸ்டார்ச் மாவு உணவுகளை கெட்டியான பதத்திற்கு கொண்டு வர, பாயாசம் போன்றவற்றில் கூட பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நம்முடைய தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், இந்த சவ்வரிசியானது மிக எளிதாக, மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பனையை விட இதில் ஸ்டார்ச் அதிகம்.

ஊட்டச்சத்துக்கள்
  • புரோட்டீன்
  • கார்போஹைட்ரேட்
  • கால்சியம் பாஸ்பர்
  • இரும்புச் சத்து விட்டமின் ஏ விட்டமின் சி குறைவான கொழுப்புச் சத்து உள்ளது.