இன்றைய ராசிபலன் (11/05/2018)

  • மேஷம்

    மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். உடன்பிறந்தவர்கள் உறுது ணையாக இருப்பார்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். புகழ், கௌரவம் கூடும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப் புகளை ஏற்பீர்கள்.  உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சாதிக்கும் நாள்.

  • கடகம்

    கடகம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். போராட்டமான நாள்.

  • கன்னி

    கன்னி: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களுக்கு கேற்ப நீங்கள் நடந்துக் கொள்வீர்கள். அவர்களின் ஆசைகளையும் பூர்த்தி செய்வீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்:  புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொட ங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

  • தனுசு

    தனுசு: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: கடந்த இரண்டு நாட்க ளாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். அழகு, இளமைக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியா பாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உற்சாகமான நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப் படுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்காதீர்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.