ஆண்கள் தங்களை விட புத்திசாலியாக இருக்கும் பெண்களை திருமணம் செய்துக் கொள்ள தயங்குவார்கள் என்று சில உளவியலார்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் குறிப்பாக எந்தவொரு ஆராய்ச்சி முடிவும் இல்லை என்பதே உண்மை.
புத்திசாலி பெண்களை மறுக்கும் ஆண்கள் ஏன்?
பொதுவாக ஆண்களில் சிலர் தனது மனைவி தன்னை மீறி எதையும் செய்யக் கூடாது, தனக்கு அடுத்த படியில் தான் மனைவி என்பவள் இருக்க வேண்டும் என்று ஆணாதிக்க சிந்தனையில் இருப்பார்கள்.
அதனால் தன்னை விட புத்திசாலியாக இருக்கும் பெண்களை தனது வாழ்க்கை துணையாக தேர்வு செய்ய மறுத்து விடுவார்கள்.
அதிலும் சில ஆண்கள் புத்திசாலிப் பெண்ணாக இருந்தால், அவர்கள் சுயநலமாக இருப்பார்கள் என்றும் அவர்கள் தனியாக வாழ்வதற்கு தைரியம் அதிகமாக இருக்கும் என்று நினைப்பார்கள்.
அதனால் வாழ்க்கை துணை கூறுவதை சற்றும் கேட்காமல் அவர்களின் விருப்பப்படி வாழ்வார்கள் என்பதற்காகவும் ஆண்கள் அத்தகைய பெண்களை திருமணம் செய்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.
எனவே தான் ஆண்களில் சிலர் தனது துணையை தேர்வு செய்யும் போது தன்னை விட குறைவாக படித்திருக்கும் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஏனெனில் பெண்கள் ஆண்களை விட அதிகமாக படித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையில் சில சமயத்தில் தாழ்வுமனப்பான்மை பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் பல வெற்றிகரமான ஆண்களுக்குப் பின் அறிவார்ந்த புத்திசாலி பெண்கள் உண்டு என்பதும் உண்மை தான். அதனால் பல ஆண்கள் புத்திசாலிப் பெண்களை விரும்புவார்கள்.
ஏனெனில் பெண் புத்திசாலியாக இருப்பது குடும்பத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் அந்த பெண் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் ஈகோ இல்லாமல் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதற்காக பெரும்பாலான ஆண்கள் புத்திசாலியான பெண்களை விரும்புவதும் உண்டு.