பெர்லினில் ஆரம்ப பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையகள் பர்தா அணிவதற்கு தடைசெய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆரம்ப பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை வகுப்பு நேரத்தில் பர்தா அணிந்திருந்துள்ளார். ஆனால், அனைவரும் ஒன்று சேர்ந்து படிக்கும் பள்ளியில், தங்களது மதத்தினை அடையாளப்படுத்தும் விதமாக பர்தா அணிவதற்கு அனுமதி கிடையாது.
இது ஒருவகையில் மதரீதியான பிரதிபலிப்பு ஆகும், எனவே பெர்லின் நடுநிலை சட்டத்தின்படி ஆசிரியைகள் தங்கள் பணிநேரத்தில் பர்தா அணிவதற்கு தடைவிதித்து நீதிபதி Arne Boyer உத்தரவிட்டுள்ளார்.