வேலைவாய்ப்பின்மை பிரச்சினையைத் தீர்க்கும் ஜனாதிபதி!

வேலைவாய்ப்பின்மை பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கூடுதலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் புதிய பார்வை எனும் தொனிப்பொருளில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் Charlemagne எனும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். ஜேர்மனியின் ஆஃகன் (Aachen) நகரில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் உரையாற்றியபோது, ‘ பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலைவாய்ப்பு பிரச்சினை பாரிய பிரச்சினையாகக் காணப்படுவதுடன், மேற்படி நாடுகளில் வேலைவாய்ப்பு பிரச்சினையில் 30 முதல் 50 சதவீத அதிகரிப்புக் காணப்படுகின்றது.

இதனால், இளைஞர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், வேலைவாய்ப்பின்மையினால் அவர்கள் ஆபத்தை எதிர்நோக்கவும் வழிவகுக்கும்’ எனவும் தெரிவித்தார்.

ஆகவே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் காணப்படும் வேலைவாய்ப்பு பிரச்சினைகளைத் தீர்க்க சீர்திருத்த நடவடிக்கை அவசியமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.