பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொகுப்பாளர் யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் மக்களை சென்றடைந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா, ரைஷா, ஆரவ் ஆகியோர் இப்போது சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டனர். முதல் சீசனை கமல் தொகுத்து வழங்கியதால் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், வருகிற ஜூன் மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடங்குகிறது. இதில், பங்கேற்க பல சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் ஆர்வமாகி வருகிறார்கள். கமல் சீசன் 2 தொகுத்து வழங்கப்போவது இல்லை. அதனால் சூர்யா, அரவிந்த்சாமி இருவரில் ஒருவரை இதில் பங்கேற்க வைக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பேசி வருகிறார்கள். ஆனால் இன்னும் யார் என்பது உறுதியாகவில்லை. இருப்பினும், அரவிந்த்சாமி பிக்பாஸ்-2வை தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.