தனியார் பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று மாலை 4.20 மணியளவில் தனியார் பேருந்துடன் – மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் பாடசாலை வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஹொரவப்பொத்தானை வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் வவுனியா நகரலிருந்து இறம்பைக்குளம் பாடசாலை வீதிக்கு திரும்ப முற்பட்ட தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.