அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேற்கு அவுஸ்திரேலியாவின் Margaret ஆற்று பகுதியிலுள்ள Osmington என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அவுஸ்திரேலிய நேரப்படி இன்று காலை 5.15 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
4 சிறுவர்கள் மற்றும் 3 இளம் வயதுடையோர் இந்த சம்பவத்தினால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.பொதுக் கட்டடம் ஒன்றிலிருந்து ஐந்து சடலங்களும் கட்டடத்திற்கு வெளியில் இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், பலர் காயமடைந்திருக்கலாம் அல்லது பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.எந்தவொரு இழப்பும் துயரமானது, ஆனால் நான்கு குழந்தைகள் மற்றும் மூன்று இளம் வயதினரின் இழப்பு கடுமையான சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.தாக்குல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சந்தேகநபர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
1996 ஆம் ஆண்டிற்கு பின்னர் மிக மோசமான துப்பாக்கி சூட்டு சம்பவம் இதுவெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.