“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-3)

• அன்ரன் பாலசிங்கத்தின் பத்தாவது  ஆண்டு  நினைவு தினத்தையொட்டி  பிரசுரிக்கப்படும் கட்டுரை.

தத்துவாசிரியர் மற்றும் பிரதம பேச்சாளர்

1983 ஜூலையில் நடைபெற்ற தமிழர் விரோத கலவரம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் போராளிகளுக்கு புது தில்லி பின்துணை நல்குவது தமிழ்நாட்டில் கண்ணுக்கு புலப்படும் காட்சியாக மாறியது.

பாலசிங்கம் தம்பதியினர் சென்னைக்கு குடிபெயர்ந்தார்கள்.

கலாநிதி.ஏ.எஸ் பாலசிங்கம் எல்.ரீ.ரீ.ஈயின் தத்துவாசிரியர், தலைமைப் பிரச்சாரகர் மற்றும் பிரதம பேச்சாளர் ஆக மாறினார். பாலசிங்கம் குடும்பத்தினர் பட்டினப்பாக்கம், திருவான்மியூர் பின்னர் அடையாறு ஆகிய இடங்களில் தங்கியிருந்தார்கள்.

தமிழ் போராளிக் குழுக்கள் பிரதமர் இந்திரா காந்தியின் பின்னணியில் வைக்கப் பட்டிருந்தார்கள் அவர் கொழும்புடனான பேச்சு வார்த்தைகளுக்கு ரி.யு.எல்.எப் இனை நம்பிருந்தார்.

index “தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-3) “தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-3) index9

திம்பு பேச்சுவார்த்தை

எல்.ரீ.ரீ.ஈ உட்பட ஐந்து   தமிழ் குழுக்களை  1985ல் பூட்டானில்   நடைபெற்ற திம்பு பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளும்படி நிர்ப்பந்தம் செய்ததின் மூலம் ராஜீவ் காந்தி அனைத்தையும் மாற்றினார்.

எல்.ரீ.ரீ.ஈயின் சொந்த ஊடகமான தமிழ் நெற் உட்பட ஊடகங்களில் ஒரு பகுதி பாலசிங்கம் திம்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாக தவறாகக் குறிப்பிட்டிருந்தன.

அது தவறு. எல்.ரீ.ரீ.ஈயின் பிரதிநிதிகள், லோறன்ஸ் திலகர் மற்றும் அன்ரன் சிவகுமார் ஆகியோரே. பாலசிங்கம் சென்னையில் இருந்தபடியே தொடர்ச்சியான தொடர்பாடல்கள் மூலம் அவர்களை வழி நடத்தினார்.

புது தில்லியின் புதிய வழியினைப் பின்தொடர்வதற்கு தமிழ் போராளிகள் மறுப்பு தெரிவித்தது ராஜீவ் காந்திக்கு கோபமூட்டியது. அவர் அன்ரன்  பாலசிங்கம் மற்றும் எஸ்.சி சந்திரஹாசன்  ஆகியோரை   இந்தியாவை விட்டு வெளியேற்றும்படி ஆணையிட்டார்.

பாலசிங்கம் லண்டனுக்கு அனுப்பப்பட்டார். இதன் விளைவாக தமிழ்நாடு செலுத்திய அழுத்தம் ராஜீவ் காந்தியின் சினத்தை தணித்தது. பாலசிங்கம் வெற்றியுடன் இந்தியா திரும்பினார்.

பாலசிங்கத்தை கொலை செய்யும் ஒரு முயற்சியும் நடைபெற்றது, அதன் சூத்திரதாரிகள் ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவினர் என்று சொல்லப்பட்டது.

முன்னாள் காவல்துறைக் காவலரும் மற்றும் மலையகத் தமிழ் அரசியல்வாதியுமான கந்தசாமி நாயுடு, பாலசிங்கத்தின் வீட்டில் ஒரு வெடிகுண்டு கருவியை பொருத்தியதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

புலிகளின் கருத்தியல்வாதி என்று விபரிக்கப்பட்ட பாலசிங்கம் மொழி பெயர்ப்பாளர் மற்றும் அரசியல் ஆலோசகர் ஆகிய இரட்டை தகுதியுடன் முக்கியமான கூட்டங்களுக்கு பிரபாகரனுக்கு துணையாகச் சென்றார்.

1986ல் பெங்களுரில் ராஜீவ் காந்தியுடன் நடைபெற்ற கூட்டத்துக்கு பிரபாவுடன் பாலாவும் சென்றிருந்தார்.

1987ல் சென்னையில் இருந்து வெளிநாட்டு அரசியல் வேலைகளைக் கவனிக்கும்படி பாலசிங்கத்தை விட்டுவிட்டு பிரபா சென்னைக்கு நகர்ந்தார்.

ஜூலை 87ல் பிரபா இந்தியாவுக்கு உலங்கு வானூர்தியில் அழைத்து வரப்பட்டார்.

பாலசிங்கத்துடன் சேர்ந்து யோகி மற்றும் திலகர், பிரபாகரன் ஆகியோர் புது தில்லிக்குச் சென்றார்கள். எல்.ரீ.ரீ.ஈயின் மறுப்புக்கு மாறாக இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முன்கொண்டு செல்வதற்கு இந்தியா முடிவு செய்தது.

இப்போது பாலசிங்கம் யாழ்ப்பாணத்துக்கு சென்றார். திருநெல்வேலி அலுவலகத்தில் பாலசிங்கம் தானே அரசியல் வேலைகளை ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டார்.

ஆனால் விரைவிலேயே போர் வெடித்தது.

anton-adele-balasingham “தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-3) “தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-3) Anton Adele Balasingham
கணவன் மனைவி ஆகிய இருவரும் இந்திய இராணுவத்தால் இலக்கு வைக்கப் பட்டார்கள். அடேல் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணாக இருப்பதால் யாழ்ப்பாணத்தில் எளிதில் கவனத்தைக் கவரும் விதத்தில் இருந்தார்.

இருந்தும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு ஆட்களுடன் தங்கியபடி தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டே இருந்ததால் அவர்கள் பிடிபடாமல் தப்பினார்கள்.

அவர்கள் இருவரும் நெல் வயல்களுக்குள் முகத்தை தரையில் பதித்தபடி மணிக்கணக்காக கிடந்த நேரங்களும் இருந்தன.

ஒரு கட்டத்தில் இருட்டில் வெட்ட வெளியில் மலசலம் கழிக்கவேண்டிக் கூட நேர்ந்தது. பாலசிங்கம் அவரது மனைவிக்கு பாதுகாவலராக நின்றார். இந்த அனுபவங்களை எல்லாம் அடேல் தனது புத்தகத்தில் விபரமாகத் தெரிவித்துள்ளார்.

பாலசிங்கம் குடும்பத்தினர் இந்தியாவுக்குத் திரும்பியபின்னர் அங்கிருந்து பிரித்தானியா சென்றார்கள்.

ரணசிங்க பிரேமதாஸவுடன் பேச்சு வார்த்தை நடத்தவதற்காக பாலசிங்கம் மீண்டும் கொழும்புக்கு வரணே;டியிருந்தது. அரசாங்கம் – எல்.ரீ.ரீ.ஈ பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்தபோது, பாலசிங்கம் எல்.ரீ.ரீ.ஈயின் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கினார்.

ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டதினால் இந்திய இராணுவம் விரைவிலேயே ஸ்ரீலங்காவை விட்டு பின்வாங்க நேர்ந்தது.; இந்தியர்கள் அங்கிருந்து சென்றதுமே கொழும்பு – யாழ்ப்பாண உறவு முறிந்தது. திரும்பவும் போர் வெடித்தது.

slide011-copy-328x500 “தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-3) “தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-3) Slide011 copyவெளிச்சம் சஞ்சிகைக்காக பிரம்மஞானி

வடக்கின் பெரும்பகுதி எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததால் பாலசிங்கம் தம்பதியினர் இப்போது யாழ்ப்பாணத்தில் குடியமர்ந்தார்கள்.

அடேல் ஆன் மருத்துவ பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு என்பனவற்றும் உதவி செய்துவந்த அதேவேளை பாலசிங்கம் அரசியல் வேலைகளைக் கவனித்து வந்தார்.

யாழ்ப்பாண ஊடகங்கள்கூட மறைமுகமாக   அவரது கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. பழைய  தொடர்பாளர்கள் மற்றும் நண்பர்கள் கடந்தகால வாழ்க்கை மற்றும் பழைய நினைவுகளுக்காக ஏங்கிய பாலசிங்கத்தினை நன்கு மகிழ்ச்சிப் படுத்தினார்கள்.

அவரும் விரிவாக எழுதத் தொடங்கினார். அவைகளின் மத்தியில் இருந்த பல மனோதத்துவக் கட்டுரைகள் பிரம்மஞானி என்கிற புனைபெயரில் வெளிச்சம் இதழில் வெளிவந்துள்ளன.

இந்தக் கட்டத்தில்தான் துணைத் தலைவர் மாத்தையா தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் பிரபாகரனால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வு பிரிவுத் தலைவர் அவரை விசாரணை செய்து அவரிடம் இருந்து ஒரு மன்னிப்பை பெற்றுக் கொண்டார்.

அரசியல் பிரிவு தலைவரான யோகியும் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

எல்.ரீ.ரீ.ஈ தலைமைக்கு விசுவாசமும் நம்பிக்கைக்கும் உரிய சங்கர் என்கிற சொர்ணலிங்கத்தை அரசியல் பிரிவு தலைமைக்கு நியமிக்க விருப்பம் இருந்தது.

பாலசிங்கத்துக்கு சங்கருடன் ஆழமான வேறுபாடு இருந்ததினால் பிரபாகரனை அதைரியப் படுத்தினார்.

s_p_thamilchelvan_int “தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-3) “தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-3) s p thamilchelvan int
சங்கருக்கு பதிலாக பாலசிங்கம் அரசியல் பிரிவுக்குத் தலைவராக சுப்பையா பரமு தமிழ்செல்வனை நியமிக்கும்படி செய்தார். முன்பு தினேஷ் என்று அழைக்கப்பட்ட தமிழ் செல்வன், பூனரியான் யுத்தத்தில் காயமடைந்ததினால் நடப்பதற்கு ஊன்றுகோலின் சகாயம் வேண்டியிருந்தது.

சந்திரிகா குமாரதுங்கவின் வருகையுடன் திரும்பவும் சமாதானப் பேச்சுக்களுகான ஒளி அடிவானத்தில் தெரிந்தது. சந்திரிகாவின் செயலாளர் பாலபட்டபந்தி தலைமையிலான குழுவினர், தமிழ்செல்வன் தலைமையிலான எல்.ரீ.ரீ.ஈயின் தூதுக்குழுவை பேச்சு வார்த்தைகளுக்காக சுண்டிக்குளியில் சந்தித்தார்கள்.

பாலசிங்கம் அடுத்த அறையில் இருந்து கண்காணித்தபடி தமிழ் செல்வனுக்கு ஆலோசனை வழங்கினார்.

கண்ணுக்குப் புலப்படும் தமிழ் செல்வனுக்கும் மற்றும் கண்ணுக்குத் தெரியாத பாலசிங்கத்துக்கும் இடையில் ஏராளமான குறிப்புகள் பரிமாறப்பட்டன.

பாலசிங்கத்தின் வளர்ப்பு நாய் ஜிம்மி கட்டுப்பாட்டு அறையைவிட்டு வெளியே வரும்வரையில் தொடர்ந்து நடந்த இந்த விளையாட்டு நிறுத்தப்பட்டது.

ஆனால் அதே தமிழ்செல்வன் அடுத்து வந்த வருடங்களில் வளர்ச்சி பெற்று பின்னொரு முன்னேற்றத்தில் பாலசிங்கத்தின் முதுகில் குத்தினார். ஆனால் அது மற்றொரு கதை.

1965 ஏப்ரலில் மீண்டும் ஒரு யுத்தம் வெடித்தது. ரிவிரச நடவடிக்கை மூலம் எல்.ரீ.ரீ.ஈ யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து பின்வாங்கி வடக்கின் பிரதான நிலப்பரப்பான வன்னிக்கு இடம்பெயர்வதைக் காண முடிந்தது.

அன்ரன் மற்றும் அடேல் ஆகியோரும் கூட இடம்பெயர்ந்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் கிளிநொச்சி நகருக்கு அண்மையிலிருந்த திருவையாறு என்ற இடத்தில் தங்கியிருந்தார்கள்.

பின்னர் புதுக்குடியிருப்பில் நிழலான மரங்கள் பெரிய சுற்றுமதில்போல சூழ்ந்திருந்த ஒரு வீட்டுக்கு மாறினார்கள். பாலசிங்கத்துக்கு அது ஒரு ஆனந்தமயமான ஓய்வு போல இருந்தது. ஆனால் விரைவிலேயே புதிய பிரச்சினை தலைதூக்கியது.

ஒரு மரபு வழியில் இல்லாத வாழ்க்கைப்பாணி

3441211879_a8c358c755 “தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-3) “தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-3) 3441211879 a8c358c755வருடக்கணக்கான நீரிழிவு நோய் மற்றும் மரபு வழியற்ற வாழ்க்கை முறை என்பன அவற்றின் உச்சத்தை எட்டியது. பாலசிங்கம் கடுமையான சிறுநீரக உபத்திரவத்தால் துன்பப்பட்டார்.

வன்னியில் இருந்த மருத்துவர்கள் உயரிய சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்வது நல்லது என உணர்ந்தார்கள். இல்லையெனில் அவர் இறந்துவிடலாம் என அவர்கள் சொன்னார்கள்.

அதன்பின்னர் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரன் ஒரு சிறப்பியல்பற்ற நடவடிக்கையை ஆரம்பித்தார்.

அவர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் சேவை, கத்தோலிக்க குருமார் ஒரு பிரிவினர், மற்றும் நோர்வே என்பனவற்றை பட்டியலிட்டு மனிதாபிமான அடிப்படையில் அவரது பரம எதிரியான சந்திரிகா குமாரதுங்கவிடம் ஒரு நேரடி விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக் னொண்டார்.

மருத்துவ சிகிச்சைக்காக பாலசிங்கம் கொழும்பினூடாக வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கும்படி குமாரதுங்காவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

குமாரதுங்காவின் ஆரம்ப பதில் சாதகமானதாக இருந்தது. இந்த பிரச்சினை பற்றி முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருடன் குமாரதுங்க ஆலோசனை நடத்திய பின்னர் நிகழ்வுகளின் போக்கில் மோசமான மாற்றங்கள் ஏற்பட்டன.

குமாரதுங்காவின் சாதகமான பதிலுக்காக எல்.ரீ.ரீ.ஈ காத்துக்கொண்டிருந்த அதேவேளை பாலசிங்கத்தின் உடல்நிலை மோசமடைந்தது.

இறுதியாக நோர்வே எல்.ரீ.ரீ.ஈயிடம் அறிவித்தது, குமாரதுங்க – கதிர்காமர் ஆகிய இருவரும் “கணிசமானளவு மனிதாபின நோக்கத்துக்கான பரஸ்பர வெளிப்படுத்தல்கள்” என்கிற தலைப்பின்கீழ் ஒரு கோரிக்கைகளின் பட்டியலை தயாரித்து, ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உதவியுடன் பாலசிங்கத்தை வெளிநாட்டுக்கு ஆனுப்ப வேண்டுமானால் அந்த கோரிக்கைகள் எல்.ரீ.ரீ.ஈயினால் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கேட்டிருந்தார்கள் என்று.

குமாரதுங்க பாலசிங்கத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி   சுரண்டல் மேற்கொள்ள முனைகிறார்  மற்றும் பதிலுக்கு பிரதான சலுகைகளை திரும்பப்பெற முயற்சிக்கிறார் என்பதும் தெளிவாகத் தெரிந்தது.

அந்த கோரிக்கைகளை   அப்பட்டமாக நிராகரித்து  விடும்படி பாலசிங்கம் பிரபாகரனிடம் தெரிவித்தார்.

“இந்த இழிவான கோரிக்;கைகளை ஏற்றுக் கொள்வதைவிட கௌரவத்துடனும் மற்றும் சுயமரியாதையுடனும் மரணிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று பாலசிங்கம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

குமாரதுங்க மற்றும் கதிர்காமர் ஆகியோரால் நிர்ணயிக்கப்பட்ட கோரிக்கைகள் பிரபாகரனுக்கு சினமூட்டியதாகச் சொல்லப்படுகிறது.

பாலசிங்கத்தை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு வேண்டிய சாத்தியமான அனைத்தையும் தான் செய்வதாக பிரபாகரன அடேல் பாலசிங்கத்திடம் உறுதியளித்தார். அதற்காக ஒரு புதிய தெரிவு பின்தொடர்ந்தது.

பாலசிங்கம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் 1999 ஜனவரி 23ல், கடற்புலி தளபதி சூசையின் தலைமையில் ஒரு கடற்புலிகளின் படகில் ஏற்றப்பட்டு  நடுக்கடலில் நின்று கொண்டிருக்கும்  ஒரு எல்.ரீ.ரீ.ஈயின் கப்பலுக்கு கொண்டு வரப்பட்டார்கள்.

அதன் பின்னர் அந்தக் கப்பல் தாய்லாந்தின் புக்கற் நோக்கி புறப்பட்டது. ஆபத்தில் முடிந்துவிடக்கூடிய அந்த விறுவிறுப்பான கடற்பயணத்தில் இருந்து சுகமாகக் கரையேறிய பாலசிங்கம் பரிசோதனைக்காகவும் மற்றும் சிகிச்சைக்காகவும் பாங்கொக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த மருத்துவ பரிசோதனையில் விரிவடைந்துள்ள சிறுநீரகங்களில் ஒன்று உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனத் தெரியவந்தது. அவர்கள் சிங்கப்பூருக்குச் சென்று அங்கிருந்து லண்டனுக்குச் சென்றார்கள்.

நோர்வே அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதின் பின்னர் பாலசிங்கம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக ஒஸ்லோவுக்கு இடம்பெயர்ந்தார்.

நோர்வேயில் வசிக்கும் ஒரு இளைய ஸ்ரீலங்காத் தமிழனான டொனால்ட் தனது சிறுநீரகத்தை தானம் செய்ய தானாக முன்வந்தான்.

அதிலிருந்து மீண்டு குணமடைந்த பாலசிங்கம் உற்சாகமான ஊக்கத்துடன் சமாதான நடவடிக்கைகளை முன்னேற்றும் முயற்சியில் இறங்கினார்.

1999 டிசம்பர் 2ல் லண்டனில் டொக்லான்ட்டில் இடம்பெற்ற மாவீரர் நாள் அனுசரிப்பில் அவரது முதல் பொது வெளிப்பாடு இடம்பெற்றது. நோர்வே உடனான அனைத்து கலந்துரையாடல்களிலும் எல்.ரீ.ரீ.ஈயின் பிரிதிநிதியாக கலந்துகொண்ட அதேவேளை அதைப்பற்றி பிரபாகரனிடம் அடிக்கடி தெரிவித்தும் வந்தார்.

geneva_talks_02_51171_435 “தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-3) “தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-3) geneva talks 02 51171 435விசேட தூதுவர் எரிக் சொல்ஹைம்

எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் ஆலோசகர் நோர்வேயின் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹைம் உடன் மிகச் சிறந்த நல்லுறவை ஏற்படுத்தியிருந்தார்.

யுத்த றிறுத்தம் ஒழுங்காகப் பின்பற்றப்படுவதற்கு ஆரம்பத்தில்  எல்.ரீ.ரீ.ஈ பக்கத்திற்கு பொறுப்பாக பாலசிங்கம் இருந்தார்.

அது 2002 பெப்ரவரி 23ல் நடைமுறைக்கு வந்தது. அந்த யுத்த நிறுத்தம் பெருமளவு எல்.ரீ.ரீ.ஈக்கு சார்பாக இருந்ததுடன் தேசிய பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அதிக நம்பிக்கையையும் வழங்கியது.

அதன் பின்னர் பாலசிங்கம் வன்னிக்கு ஒரு வெற்றிகரமான மறுவரவை மாலைதீவுகளில் இருந்து ஒரு கடல் விமானத்தில் ஏறி பயணம் செய்து இரணைமடு குளத்தில் இறங்கியது மூலம் மேற்கொண்டார்.

அவர் முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடனான சந்திப்பில் பிரபாவின் பக்கம் இருந்தார்.

20030620006600402 “தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-3) “தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-3) 20030620006600402மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில் பாலசிங்கம் தானும் எல்.ரீ.ரீ.ஈ தலைவரும் ஒரே மனநிலையில் இருப்பதாகவும் மற்றும் ஒரே குரலில் பேசுவதாகவும் தெரிவித்தார்.

கருணாவின் கிளர்ச்சி சற்றும் எதிர்பாராத ஒரு விளைவு.

வடக்கு மற்றும் கிழக்கில் நிலவும் நீண்ட கால பிரிவினையின் விளைவுகள் பற்றி நன்கு அறிந்திருந்ததாலும் மற்றும் அரசாங்கத்துடன் கருணா இணையக்கூடிய சாத்தியம் பற்றி அறிந்திருந்ததாலும் மீண்டும் ஒரு முறை பாலசிங்கம் கடும் முயற்சி செய்து அந்தப் பிளவை சரி செய்ய முயன்றார்.

ஒரு தற்காலிக சமாதானம் அமல்படுத்தப்பட்டு கருணா நாட்டை விட்டு வெளியேறத் தயார் நிலையில் இருந்தார்.

ஆனால் பிரதான பகுதி எல்.ரீ.ரீ.ஈ ஒரு கடும்போக்கினை பின்பற்றியது, அதன்படி கருணா அரசாங்கத்தின் கரங்களுக்குள் விரட்டப்பட்டார். மிகுதி யாவரும் அறிந்த சமீபத்தைய வரலாறு.

ஆரோக்கிய நிலை காரணமாக பாலசிங்கத்தால் நீண்ட காலம் தொடர்ந்த வன்னியில் தங்க முடியவில்லை, ஆனால் ஆலோசனைகள் வழங்குவதற்காக அவ்வப்போது வன்னிக்கு விஜயம் மேற்கொண்டார்.

மேலும் அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தைகளின்போது எல்.ரீ.ரீ.ஈ யின் தூதுக்குழுவிற்கு தலைமையேற்று தாய்லாந்து, நோர்வே,ஜேர்மனி, மற்றும் ஜப்பான் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார்.

பேச்சுக்களில் எல்.ரீ.ரீ.ஈ பிரச்சினைகளின் போக்கை மாற்றும் வழியை பின்பற்றும் போதெல்லாம் பாலசிங்கம் ஒரு குறைந்த சுய விபரத்தை பின்பற்றலானார். சீரழிந்து வரும் உடல் நிலையும் இந்த நிலமைக்கு பங்களிப்பு செய்தது.

2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் எல்.ரீ.ரீ.ஈ முக்கியமாக புறக்கணிப்பை அமல் படுத்தியதன் காரணமாக ராஜபக்ஸ வெல்வதைக் காணமுடிந்தது.

இருந்தும் பாலசிங்கம் 2006 ஆரம்பத்தில் ஜெனிவாவில் நடந்த பேச்சுக்களில் எல்.ரீ.ரீ.ஈக்கு தலைமையேற்க திரும்பவும் வந்தார். மீண்டும் ஒருமுறை கொழும்பிடமிருந்து ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களைக் களைவதற்கான ஒரு பிரதான சலுகையை பாலசிங்கம் பெற்றுக் கொடுத்தார். ஆனால் அந்த உத்தரவாதம் மதிக்கப் படவில்லை. நிலமை மேலும் மோசமடைந்ததுடன் யுத்தமும் தீவிரமடைந்தது.

ltte_deleg “தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-3) “தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-3) ltte delegமாவீரர் தின உரை

இதற்கிடையில் பாலசிங்கத்தின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. அவருக்கு புற்றுநோய் இருப்பதாக அடையாளம் காணப்பட்டு உயிர் வாழுவதற்கான கால அவகாசம் ஆறு முதல் எட்டு வாரங்கள் என நிர்ணயிக்கப் பட்டது.

இத்தகைய முற்றிப்போன நோய்க்கிடையிலும் பிரபாகரனுக்காக 2006 நவம்பர் 27க்கான மாவீரர் தின உரையை அவர் எழுதினார். அதுதான் அவரது மரணத்துக்கு முன்பாக அவர் எழுதிய இறுதி எழுத்து. நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இருந்தும் அவர் ஆட்களை தனிப்பட்ட முறையில் சந்திப்பது மற்றும் தொலைபேசி மூலம் பேசுவதையும் நிறுத்தாமல் செய்து வந்தார்.

அவர் தனது நண்பர்களுடனான உறவை புதுப்பித்ததுடன் அவருடைய பழைய மற்றும் பிரிந்துபோன நண்பர்களுடன் சமாதானம் செய்து கொண்டார். அவர் மரணத்தின் கடவுளாம் யமனின் வருகைக்காக அமைதியாகக் காத்திருந்தார். 2006 டிசம்பர் 14ல் அவர் மரணமடைந்தார்.

பாலசிங்கத்துடன் இணைவதற்கு மிகப் பொருத்தமான நபர் வேறு யாருமில்லை அவரது மனைவி மட்டுமே.

இதுதான் அவர் மனைவி முன்பு எழுதியது – “பாலாவை நான் முதன்முதல் சந்தித்தபோது நான் மணம் செய்யப்போகும் மனிதர் கொண்டிருக்க வேண்டியது என நான் நம்பிய முதிர்ச்சி, அறிவு, மனோவலிமை மற்றும் மிகவும் முக்கியமாக பராமரிப்பு அனைத்துக்கும் பொருத்தமானவர் அவர்தான் என உணர்ந்தேன்.

அறிவு என்பதில் நான் ஒரு கல்விஞானத்தை குறிப்பிடவில்லை மற்றும் மனோ வலிமை என்பதில் நான் ஆஜானுபாகுவான அல்லது ஆணவம்மிக்க அல்லது ஆக்கிரமிப்பான ஆள் என அர்த்தப் படுத்தவில்லை.

நான் சந்திக்க எதிர்பார்த்திருந்தது ஒரு விதிவிலக்கான மனிதரை, அவர் மரியாதை உடையவராக இருக்க வேண்டும் ஆனால் பலவீனமானவராக அல்ல, அவர் எளிமையானவராக ஆனால் இன்னும் ஆழமானவராக, உறுதியானவராக இருக்கவேண்டும் ஆனால் சுயநலம் சார்ந்தவராக அல்ல.

அவர் நம்பிக்கையானவராக இருக்கவேண்டும் ஆணவக்காரராக அல்ல. அவர் தாராள குணம் கொண்டவராக இருக்கவேண்டும், பெருமை இருக்கவேண்டும் ஆனால் வீணானதாக இருக்க கூடாது.

அவர் சுயநலக்காரராகவேர் சிந்தனை அற்றவராகவோ இருக்க கூடாது. அந்த மனிதரைத்தான் அத்தனை வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்தேன், எங்களது முதல் சந்திப்பு நடந்து சில வாரங்களுக்குள் பாலசிங்கம்தான் எனக்குரியவர் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று.

அடேல் ஆன் தனது புதிய வாழ்வு பற்றி அவரது நூலில் எழுதியிருப்பதை விட சிறப்பான நினைவுச்சின்ன வார்த்தைகள் வேறு இருக்க முடியாது.

“1978ல் ஸ்ரீலங்கா தீவைச் சேர்ந்த ஒரு தமிழ் மனிதரை மண முடித்ததின் பின்தான் இவை அனைத்தும் ஆரம்பமானது.

அந்த இணைப்பு மூலமாக, ஒரு மக்களின் கூட்டு உணர்வையும் மற்றும் வரலாற்றையும் நான் மணம் முடித்துள்ளேன். தமிழ் ஆன்மாவின் அனைத்து பலங்கள் மற்றும் பலவீனங்கள், பெருந்தன்மைகள் மற்றும் தவறுகள் அனைத்தையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் ஒரு மனிதர் அவர்”.

டி.பி.எஸ்.ஜெயராஜ்

(முற்றும்)

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்