பெண்கள் எப்போதும் இளமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்கள் எப்போதும் இளமையாக இருக்க முடியும்.
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. எனவே இந்த பழங்களை சாப்பிட்டால், அவற்றில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
தக்காளியில், சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் முதுமை கோடுகளையும் தடுக்கும் லைகோபீன் அதிகமாக இருக்கிறது. எனவே இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்திற்கு ‘மாஸ்க்’ போல தடவி பயன்படுத்தலாம்.
நல்ல ஆரோக்கியமான இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொண்டால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் நன்கு பொலிவு பெறும். அதிலும் குறிப்பாக விட்டமின் A, C, E, லைக்கோபீன், லுட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்களையும் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால் முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம்.