கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில் பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களையும் அடங்கியுள்ளன. மேலும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது.
புதிய கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை கண் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.
கொத்தமல்லி இலைகளை நன்கு அரைத்து தண்ணீரில் கொதிக்க விட்டு, அதனை மெல்லிய சுத்தமான துணியினால் வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த நீரின் சில சொட்டுக்களை கண்களில் விடுவதால் கண் எரிச்சல், கண் உறுத்தல், கண் வலி ஆகியவை குணப்படுவதோடு, கண்களில் நீர் வடிதலும் நிற்கும்.
கொத்தமல்லி இலையில் நிறைந்துள்ள வாசனை எண்ணெயான சிட்ரோநெல்லோல், சிறப்பான கிருமிநாசினித் தன்மை கொண்டுள்ளது. எனவே இது வாயில் உள்ள புண்களை ஆற்றுவதோடு, அது வராமலும் தடுக்கும்.
கொத்தமல்லி இலைகளுக்கு பூஞ்சைகளை நீக்கும் சக்தியும், நச்சுக்களை நீக்கும் ஆற்றலும், தொற்றுக்களை நீக்கும் ஆற்றலும் உண்டு. மேலும் இது சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. இதன் காரணமாக சில சரும நோய்களை நீக்குவதில் இது மிகவும் உதவிகரமாக உள்ளது.
மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வலியை குறைக்கிறது. முறையான மாதவிடாய் சுழற்சி உண்டாக உதவுகிறது.
கொத்தமல்லி இலைகள் நரம்புகளை ஊக்குவிக்கும் ஒரு நல்ல மருந்தாக உள்ளது. இது மறதியை கட்டுப்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. கொத்தமல்லி இலைகள் வாயிலுள்ள புண்களை ஆற்றுவதோடு, அது வராமலும் தடுக்கும். மேலும் சுவாசத்தை புத்துணர்ச்சியாக்குவதோடு, வாய்ப் புண்களை நன்கு குணப்படுத்தும் தன்மை கொண்டது.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொத்தமல்லி இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால், ரத்த அழுத்தம் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கொத்தமல்லியை ஜூஸ் போட்டு குடிப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்கி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.