நாம் உண்ணும் உணவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அதைச் சரியான முறைப்படுத்தி நம்முடைய வயிற்றுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை, ஏனோ நம்மில் பலர் உணர்வதில்லை.
வீ ட்டில் தாயோ அல்லது மனைவியோ வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கும், எது நல்லது என பார்த்துபார்த்து செய்வார்கள்.
ஆனால் நாமோ அவசரகதியிலோ அல்லது ஸ்மார்ட்போனையோ வேடிக்கைப் பார்த்துக்கொண்டோ சாப்பிட்டுவிட்டு எழுந்துவிடுவோம்.
சாப்பிடும்போது புரை ஏறுவதை, யாரோ நினைக்கிறார்கள் என்று சொல்வார்கள் சிலர், அப்படியெல்லாம் எதுவுமில்லை. நாம் சாப்பிடும் சாப்பிட்டின் மீது நமக்கு கவனம் இல்லை என்றுதான் அதற்கு அர்த்தம்.
புரை ஏறும்போது என்ன செய்ய வேண்டும்?
புரை ஏறியபின் மூக்கு மற்றும் வாய் அண்ணப்பகுதியில் அதிகமாக எரிச்சல் உண்டாகும். அதை உடனடியாக சரிசெய்ய என்னவெல்லாம் செய்யலாம்? புரை ஏறியவர்களின் முதுகில் கை வைத்து, வேகமாக தட்டக்கூடாது. பொதுவாகவே புரை ஏறினால் நாம் எல்லோருமே முதுகை வேகமாகத் தட்டிக் கொடுப்பது பழக்கம்.
ஆனால் அது முற்றிலும் தவறான ஒன்று. புரை ஏறியவரை நேராக நிற்க வைக்க வேண்டும், புரை ஏறும் சமயத்தில் முதுகில் ஓங்கி குத்தினால், மூச்சுப் பாதையில் சிக்கிய உணவு, முற்றிலும் மூச்சை அடைத்து, உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடும்.
புரை ஏறிய சமயத்தில், முன்பக்கம் நோக்கி குனியவைத்து, மேல் முதுகை மட்டுமே, மெதுவாக தட்ட வேண்டும். இது மூச்சுப்பாதையில் உள்ள உணவு, வெளியேற வாய்ப்பாக அமையும்.
புரை எரியவரின் வயிற்றில் நாபிக்கு மேல்புறம், கை முஷ்டியால் சற்று வேகமாக குத்தினாலும், சிக்கிக்கொண்டிருக்கும் உணவுப்பருக்கை வெளியேறிவிடும்.
புரை ஏறும்போது உண்டாகும் பதட்டத்தால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதனால் உடனே அவரை மல்லாக்க படுக்க வைத்து நாபிக்கு மேல், நாடு வயிற்றில், கை விரல்களை மடக்கி, மெதுவாகக் குத்தினாலும், சுவசப்பாதையில் சிக்கிய உணவு, வெளியேறும். கற்பூரவள்ளி தைலம் அல்லது யூகலிபட்ஸ் தைலத்தை நுகர்ந்து பார்ப்பதன் மூலமும், மூச்சுப் பாதையில் இருந்து, உணவை வெளிவரவைக்க முடியும்.
நம் வயிற்றை சாய்க்கக்கூடிய அளவில் உள்ள மேசை அல்லது நாற்காலியின் முனைபகுதியில், நாபிக்கு சற்று மேலேயுள்ள நடுப்பகுதியை, வைத்து அழுத்தி வர, மூச்சுப் பாதையில் சென்று அடைத்த உணவுத் துணுக்குகள், வெளியில் வந்து விடும். சுவாசமும் சீராகும்.
தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைகளை சிரிக்க வைப்பதையோ, கவனத்தைத் திசைதிருப்புவதையோ தவிர்க்க வேண்டும், அப்படி செய்யும்போது, பால் மூச்சுப்பாதையில் புகுந்து, புரை ஏறிவிடும்.
இதற்கு, குழந்தையை முன்பக்கம் இலேசாக குனியவைத்து, மேல் முதுகில் தட்ட, அடைத்துக்கொண்ட பால் வெளியேறும். சில தாய்மார்கள் படுத்துக்கொண்டே குழந்தைக்கு பாலூட்டுவார்கள். இது மிகவும் தவறான ஒரு முறையாகும், இதனால் குழந்தையின் வாய்வழியே காற்று புகுந்து, காற்றோடு கலந்த பாலால், குழந்தைகளுக்கு புரை ஏறுகிறது.
சாப்பிடும்போது புரை ஏறுவதற்கு வேறு சில காரணங்கள் உண்டு…
சிலருக்கு, வயிற்றில் புண் அல்லது உணவுப்பாதையில் ஏதேனும் அலர்ஜி போன்று பதிப்ப இருந்தால் தசைகளின் செயலாற்றல் குறைந்து, உணவுடன் கலந்து கிழ்நோக்கி செல்லவேண்டிய அமிலங்கள் மேலேறிவிடும்.
இதனால் சாப்பிடும்போது அல்லது சாப்பிட்டபின் நெஞ்செரிச்சல் இருக்கும்போது புரை ஏறும். மேலும் சிலருக்கு தூங்கும்போதுகூட, புரை ஏறக்கூடிய ஆபத்து உண்டு.
அந்த சமயங்களில், அவர்களே, வயிற்றில் நாபிக்கு மேல் கை விரல்களை மடக்கி குத்திக் கொள்ளலாம். உடனே சிறிது தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்ட உடனேயே புகைப்பிடிக்கும்போது புரை ஏறும்.
குனிந்துகொண்டே பணியாற்றிக்கூடிய சிற்ப வேலை, தச்சு வேலை போன்ற வேலைகளில் ஈடுபடுவோருக்கும், புரை ஏறக்கூடிய பாதிப்புகள் ஏற்படலாம்.