வடகொரியா மேற்கொண்ட கடை அணு ஆயுத சோதனையின் தாக்கத்தால் அங்குள்ள பாரிய மலை ஒன்று தெற்கு நோக்கி 11 அடி நகர்ந்துள்ளதாக அறுவியல் ஆய்வாளர்கள் ஆதாரத்தை வெளியிட்டுள்ளனர்.
வடகொரியாவின் Mantap மலைப் பகுதியில் Punggye-ri என்ற அணு ஆயுத சோதனைக் கூடம் செயல்பட்டு வருகிறது.
இப்பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை ஒன்றை மேற்கொண்டது.
அத தொடர்ச்சியாக அப்பகுதியில் 6.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக 4.1 என்ற ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
குறித்த அணு ஆயுத சோதனையின் தாக்கத்தை கணக்கிட்டுள்ள ஆய்வாளர்கள், அது ஜப்பானின் நாகசாக்கி நகரில் வீசப்பட்ட அணுகுண்டை விடவும் 10 மடங்கு சக்தி வாய்ந்தது என உறுதிபட தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி தொடர்ந்து சில மாதங்களாக குறித்த பகுதியை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அறிவியல் ஆய்வாளர்கள்,
சோதனை நடத்தப்பட்ட Mantap மலையானது 11.5 அடி தெற்கு நோக்கி நகர்ந்துள்ளதாகவும், சுமார் 1.6 அடி பூமிக்குள் புதைந்துள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர்.
இதன் காரணமாகவே குறித்த சோதனைக் கூடம் தகர்ந்து விழுந்துள்ளதாகவும், அது அப்பகுதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் வடகொரியா மேற்கொள்ளும் 5-வது அணு ஆயுத சோதனையாகும்.
தற்போது Mantap மலைப்பகுதி சோதனைக் கூடமானது செயல்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதால் மட்டுமே கிம் ஜாங் உன் உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று அதை மூட இருப்பதாக நாடமாடுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மட்டுமின்றி தமக்கு தேவையான அளவுக்கு அணு ஆயுதங்களை உருவாக்கிய பின்னரே கொரியா பிராந்தியத்தில் அமைதிக்கு உறுதுணையாக இருப்பேன் என அவர் அறிவித்துள்ளதும்.
அதன் பின்னரே தென் கொரியாவுடன் அமைதி ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்ததும், ஜூன் மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க முடிவு செய்ததும் என கூறப்படுகிறது.
ஏற்கெனவே சேதமடைந்து, இனி பயன்பாட்டிற்கு உதவாத சோதனை கூடத்தையே, உலக நிபுணர்களின் முன்னிலையில் மூடுவிழா நாடகத்தை கிம் ஜாங் உன் நடத்த இருக்கிறார் என்பது அரசியல் தந்திரமகவே அறிவியல் நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.