மத்தியபிரதேசத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 400 ஆண்டுகளாக பிரசவம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
சங்கஷ்யாம்ஜி என்ற கிராமம் சபிக்கப்பட்ட கிராமம் என அம்மக்கள் நம்புகின்றனர்.
இக்கிராமத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள பெண்கள் தயங்குவது குறித்தும், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்தும் ஒரு ஐதீகக் கதை வழக்கத்தில் உள்ளது.
16ம் நூற்றாண்டில் இக்கிராமத்தில் கோவிலின் கட்டுமானம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கிருத பெண் ஒருவர் கோதுமை அரைத்துக் கொண்டிருந்ததாகவும், அந்த ஓசை, கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தோரையும், தெய்வங்களையும் கோவமடையச் செய்ததால் அவர்கள் சாபமிட்டு விட்டதாகவும் ஐதீகம் வழக்கத்தில் உள்ளது.
கட்டுப்பாட்டை மீறி, குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறக்கும் அல்லது தாய், குழந்தையில் யாரேனும் ஒருவர் உயிருடன் இருக்க மாட்டார் என பீதி நிலவுவதால், இக்கிராமத்தில் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள அஞ்சுகின்றனர்.
இக்கிராமத்தினரில் 90% பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். அவசர காலங்களிலோ மற்ற தவிர்க்க முடியாத நேரங்களிலோ கூட இக்கிராமத்தில் பிரசவம் நடைபெறுவதில்லை. அருகிலுள்ள கிராமங்களுக்குச் செல்லும் பெண்கள் அங்கு பிரசவம் செய்து கொள்கின்றனர்.