சினிமா துறையில் பிரபலமானவர்கள் பல கோடி ருபாய் செலவு செய்து மிக பிரமாண்டமாக திருமணத்தை நடத்தி தான் பார்த்திருப்போம். சமீபத்தில் கூட நடிகை சோனம் கபூர் திருமணம் பல நட்சத்திரங்கள் முன்னிலையில் மிக பிரமாண்டமாக நடந்தது.
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரும், பாடகரும், நடிகருமான ஹிமேஷ் ரேஷ்மையா நேற்று மிக ரகசியமாக தன் வீட்டில் திருமணத்தை நடத்தியுள்ளார்.
இவர் பல வருடங்களாக சோனியா கபூர் என்பவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அவரை தான் நேற்று ரகசிய திருமணம் செய்துள்ளார் ஹிமேஷ் ரேஷ்மையா.