குழந்தை வளர்ப்பு என்பது யாருக்குமே சுலபமாக இருந்ததில்லை. இதற்கு எங்கேயும் வழிமுறைகளை கொடுக்கப்பட்டதில்லை.
அதே போல் அதனை சரியாக செய்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியதையும் செய்ய கூடாததையும் கூட யாரும் வரையறுத்தியதில்லை.
ஓய்வு வயதே இல்லாத முழு நேர பணியாகும் இது. ஆரம்ப காலங்கள் சற்று கடினமானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கும்.
பொதுவாக ஆண்கள் என்பவர்கள் பழக்க வழக்கங்களால் நிறைந்தவர்கள்.
அவர்கள் அன்றாட பழக்கவழக்கங்களில் இருந்து சற்று மாற்றி நடந்தாலும் கூட அது அவர்களுக்கு அசௌகரியத்தை அளிக்கும். இருப்பினும் ஒரு தந்தையாக மாறிய பிறகு உங்களுக்கு இந்த வசதி கிடைக்காது.
ஒரு ஆண் தந்தையாக மாறும் போது அவனுடைய பொறுப்புகள் பன்மடங்கு அதிகரிக்கிறது.
நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வேறுபாட்டை உங்கள் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது உங்களது பொறுப்பாகும்.
யாருமே நூறு சதவீதம் ஒழுங்கு கிடையாது; நம் அனைவரிடமும் ஏதாவது குறை இருக்கவே செய்யும்.
ஆனாலும் கூட நாம் நம் குழந்தைகள் சிறந்தவற்றை கற்க முயற்சி செய்கிறோம்.
நம்முடைய சரியற்ற பழக்க வழக்கங்கள் குழந்தைகளுக்கு வந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருப்போம்.
முதலில் இது கஷ்டமான வேலையாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் அது தரும் பலனை நீங்கள் உணர்வீர்கள்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வபோது தகப்பனாக உங்களின் குணாதிசயங்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.
இதனால் தீய பழக்கங்களை கை விட்டு, சிறந்தவற்றை கடைப்பிடிக்கலாம்.
அப்படிப்பட்ட 10 சரியில்லாத பழக்க வழக்கங்களை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.
இவற்றை நீங்கள் கொண்டிருந்தால் உடனடியாக நீங்கள் நிறுத்த வேண்டும்….
1. கடைப்பிடிப்பதில் சீரற்ற தன்மை:
நீங்கள் ஒரு விதிமுறையை போட்டால், அதனை பின்பற்ற வேண்டும். ஒரே விஷயத்திற்கு சில நேரங்களில் நீங்கள் கண்டிப்புடனும்,
சில நேரங்களில் அப்படி இல்லாமலும் இருப்பதாக உங்கள் குழந்தைகள் உணர்ந்தால், ஒழுக்கத்தை அவர்கள் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்.
நீங்கள் அமைத்திருக்கும் எல்லைகளின் முக்கியத்துவத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
2. கணிக்க முடியாத வகையில் இருப்பது:
உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு பாறையாகவும் நங்கூரமாகவும் இருக்க வேண்டும்.
அப்போது தான் உங்கள் குழந்தை உங்களை முழுமையாக சார்ந்திருக்கும்.
தங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் நீங்கள் அவர்களுடன் இருப்பீர்கள் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும்.
3. தொழில்நுட்பத்துடன் ஒட்டியிருப்பது:
உங்கள் குழந்தையுடன் சிறந்த பந்தத்தை உண்டாக்க, ஸ்மார்ட் கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்துடனான உங்களது போதையை நீக்க வேண்டும்.
உங்களது குழந்தைகளுடனும் நீங்கள் தரமான நேரத்தை ஒதுக்க வேண்டும்.
4. எல்லைகள் இல்லாமல் இருத்தல்:
உங்கள் குழந்தையுடன் நண்பனாக பழக முயற்சி செய்யும் போது, முதலில் நீங்கள் ஒரு தந்தை என்பதை மறந்து விடாதீர்கள்.
காலம், பணம் மற்றும் அறநெறிகளின் மதிப்பை உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள உங்கள் குழந்தைக்கான வரம்புகளையும்
குறிப்பிட்ட எல்லைகளையும் நீங்கள் வரையறுக்க வேண்டும்.
5. எப்போதும் இல்லை என கூறாமல் இருத்தல்:
உங்கள் குழந்தைகள் என்ன கேட்டாலும் அதற்கு சரி என சொல்வதன் மூலம் உங்கள் குழந்தையின் மீதான அன்பை நீங்கள் காட்ட வேண்டியதில்லை.
சொல்லப்போனால், இதனால் நிராகரிப்புகளை கையாளுவதில் அவர்கள் திறனற்றவர்களாகி விடுவார்கள்.
அதனால் தேவைப்படும் போது முடியாது என சொல்வது அவசியமாகும்.
6. எப்போதுமே பிஸியாக இருப்பது:
உங்கள் வீட்டிற்கு அலுவலகத்தை கொண்டு வராதீர்கள். உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் நேரம் தேவை.
உறவுகளை மதிக்கவும் பொக்கிஷமாக வைத்திருக்கவும் உங்கள் குழந்தைக்கு தேவையான பண்பு இது.
7. அச்சுறுத்தல்:
உங்கள் விருப்பம் போல் உங்கள் குழந்தைகள் நடக்க அவர்களை அச்சுறுத்துவது அவர்களை கிளிர்ச்சி செய்வர்களாக மாற்றி விடும். அவர்களின் தனித்துவத்தை பாராட்டுங்கள்.
8. தொடர்ச்சியான ஒப்பீடு:
உங்கள் குழந்தைகளை பிறருடன் தொடர்ச்சியான முறையில் ஒப்பீடு செய்தால் அது அவர்களின் சுயமரியாதையை குறைக்கும்.
அவர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்து விடாதீர்கள்.
9. செவி சாய்க்காமல் இருத்தல்:
குழந்தைகளின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை கேளுங்கள். மாறாக உங்களது தத்துவங்களையே அவர்களிடம் திரும்ப திரும்ப கூறி கொண்டிருக்காதீர்கள்.
10. ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களை கைவிடுதல்:
நீங்கள் அதிகமாக புகைப்பிடித்தாலோ அல்லது மது அருந்தினாலோ, உங்கள் குழந்தைகள் முன்னால் அவற்றை செய்யாமல் குறைத்துக் கொள்ளுங்கள்.