சுவிட்சர்லாந்து நாட்டில் முன்னாள் காதலனை பழிவாங்க பேரன் ஒருவர் உலகம் முழுவதும் ஷாப்பிங் செய்து அதற்கான கட்டண ரசீதுகளை மட்டும் காதலன் வீட்டு முகவரிக்கு செல்லும் படி செய்த சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 32 வயதாகும் பெண் ஒருவர் ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். இருவருமே காதலில் மூழ்கி பின்னர் கருத்து வேற்பாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
இதற்காக காதலனை பழிவாங்க வேண்டும் என எண்ணிய காதலி, இணையதளம் மூலமாக உலகம் முழுவதும் உள்ள 60 கடைகளில் ஷாப்பிங் செய்து உள்ளார்
இந்த பொருட்களுக்கான கட்டணத்தை கட்ட முன்னாள் காதலன் முகவரியை பயன்படுத்தி உள்ளார்
பொருட்கள் மட்டும் காதலி வீட்டிற்கும், பில் தொகை மட்டும் காதலன் வீட்டிற்கும் சென்று உள்ளது
17,000 பிராங்க் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த காதலன், போலீசாரிடம் புகார் கொடுக்க விசாரணையில் இந்த அனைத்து தகவலும் வெளியாகி உள்ளது
பின்னர் அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்