பல்வேறு வகையான சேவைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து வழங்குவது கூகுளின் சிறப்பம்சம் ஆகும்.
இதேபோன்று தனது ஜிமெயில் சேவையிலும் பல வசதிகளை உள்ளடக்கி வருகின்றது.
தற்போது பயனர் ஒருவர் ஜிமெயில் ஊடாக பணத்தை அனுப்பக்கூடிய வசதியினையும், பெறக்கூடிய வசதியினையும் ஏற்படுத்தியுள்ளது.
இப் பணப்பரிமாற்ற சேவையானது Google Pay சேவையுடன் இணைந்தே மேற்கொள்ளப்படுகின்றது.
ஒரு பரிமாற்றம் மூலம் அதிகபட்சமாக 9,999 டொலர்கள் வரை பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.
எனினும் தற்போது இச் சேவையினை ஆப்பிளின் iOS சாதனங்களின் ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.