மூத்த திரைப்பட நடிகை அனிதா தாஸ் மாரடைப்பால் தனது 67-வது வயதில் மரணமடைந்துள்ளார்.
நூற்றுக்குக்கும் மேற்பட்ட ஒடியா திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற அனிதா கடந்த 1975-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார்.
திரைப்படங்கள் மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து அனிதா மக்கள் மனதை வென்றுள்ளார்.
கிருஷ்ணா சுதமா, ராமயண, சொப்னா சாகரா, கீ ஹுபா சுஹா போன்ற திரைப்படங்கள் அனிதாவுக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தன.
இந்நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்த அனிதாவுக்கு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று மரணமடைந்தார்.
அனிதாவின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.