மூட்டு வலியை வெறும் 5 நாட்களில் குணப்படுத்தும் அதிசய பானம்!

முதுமையடைந்த பின் வரும் மூட்டு வலி இப்போதெல்லாம் ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே ஏற்படுகிறது.

உடல் பருமன், உணவு பழக்கங்கள், கடுமையான உடற்பயிற்சி, தசை நார் காயங்கள், போன்றவை முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகிறது.

வெறும் ஐந்தே நாட்களில் முழங்கால் மூட்டுக்களால் ஏற்படும் வலியை குறைக்க ஒரு அதிசய பானம், எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்

பானம் செய்யத் தேவையானவை
  • அன்னாசி பழ துண்டுகள் 2 கப்
  • ஆரஞ்சு ஜூஸ் 1 கப்
  • வேக வைத்த ஓட்ஸ் 1 கப்
  • பாதாம் 2/12 டேபிள் ஸ்பூன்
  • பட்டை தூள் 1 ஸ்பூன்
  • தண்ணீர் 1 கப்

வேகவைத்த ஓட்ஸில் அன்னாசி பழ சாறை சேர்க்கவும், அதன் பின் அதில் பாதம் பருப்பை தட்டி சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும்.

அதன் பின் மிக்ஸியில் ஆரஞ்சு பழ சாறு, பட்டை பொடி , தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். அதனோடு ஓட்ஸ் கலவையை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

இந்த பானத்தை ஐந்து நாட்கள் குடித்து வர மூட்டு வலிகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்க ஆரம்பிக்கும்.

இதனை தொடர்ந்து குடித்து வர மூட்டு வலி பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

மூட்டு வலி தீர மேலும் சில உணவு வகைகள்

காரட் சாறு: தினமும் காரட் சாறு ஒரு டம்ளருடன் எலுமிச்சை சாறை சேர்த்து அருந்தி வந்தால் கால்வலிகள் குணமாகும்.

வெந்தயம்: தினமும் இரவில் சிறிது வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் காலியில் நீரோடு சேர்த்து வெந்தயத்தையும் மென்று உண்டு வர முழங்கால் வலி சரியாகும்.

இஞ்சி மஞ்சள் தேநீர் : 3 கப் நீரில் ஒரு ஸ்பூன் இஞ்சி பொடி , மஞ்சள் தூள் சேர்த்து 20 நிமிடங்கள் கொதிக்க விடவும். அதன் பின் இந்த நீரை வடிகட்டி தேநீர் போல அருந்தி வர மூட்டுவலி காணாமல் போகும்.

வெங்காயம்: வெங்காயத்தில் உள்ள சல்பர் முழங்கால் மூட்டு வலிகளை குறைக்க பெருமளவு உதவி செய்கிறது. இதன் பைட்டோகெமிக்கல்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் தூண்டுகிறது. ஆகவே மூட்டு வலி உள்ளவர்கள் உணவுகளில் வெங்காயத்தை சேர்த்து கொள்ளலாம்.

கடுகு எண்ணெய்: இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெய்யுடன் 5 பூண்டு பற்களை போட்டு வெதுவெதுப்பான சூட்டில் முழங்கால்களில் ஒத்தடம் கொடுத்து வர நிவாரணம் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்: ஒரு கப் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பான சூட்டில் மேற்கண்டவாறு ஒத்தடம் கொடுத்து வருவதன் மூலமும் முழங்கால் வலி குணமாகும்.

மஞ்சள் மற்றும் பால்: ஒரு டம்ளர் பாலில் இரண்டு ஸ்பூன் மஞ்சள் போட்டு அருந்தி வந்தால் மூட்டு வலி காணாமல் போகும்.

வெந்தய பசை: இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை பொடித்து சிறிது நீர் கலந்து பசை போலாக்கி அதனை வலியுள்ள முழங்காலில் தடவி வரலாம் இதன் மூலம் வலி குறையும்.