திவயினவின் பத்திரிகையாளர் சமன் கமகே குற்றப்புலானய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட உத்தரவை பத்திரிகையாளர் புறக்கணித்ததை தொடர்ந்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்டமை தொடர்பாக கமகே எழுதிய கட்டுரையொன்று தொடர்பில் இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை முன்னர் விசாரணைக்கு அழைத்திருந்தனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் அந்த விசாரணைக்கு சமுகமளிக்காததை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதாகவும் இதன் பின்னர் நீதிமன்றம் அவரை ஆஜராகுமாறு உத்தரவிட்டதாகவும் பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னரும் பத்திரிகையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகாததை தொடர்ந்து அவருக்கு எதிராக பிடியாணைபெற்றுக்கொண்ட அதிகாரிகள் அவரை கைதுசெய்துள்ளனர்.