இளைஞரை சிக்கவைத்த காற்று! – விபரீத ஆசையால் விழுந்த தர்ம அடி

விபரீத ஆசையால் இளைஞருக்கு, மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

வேலூரை சேர்ந்த இளைஞர் முகேஷ் என்பவருக்கு  நீண்ட நாள் ஆசை ஒன்று இருந்துள்ளது. அந்த ஆசை என்னவென்றால் பெண்களை போன்று புடவை கட்டிக்கொண்டு சென்னைக்கு சென்று வருவதுதான்.

அந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த முகேஷ், கடைக்கு சென்று முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தாவை 800 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்.

பின்னர் அவருடைய வீட்டிற்கு சென்று, தனது தாயின் புடவையை எடுத்து கட்டிக்கொண்டு, யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க பர்தாவை அணிந்துகொண்டதுடன், அவரது கைப்பையை எடுத்துக் கொண்டு சென்னைக்கு பயணம் செய்ய கிளம்பிவிட்டார். ஆனால், அவருடைய நீண்டநாள் ஆசை வேலூர் புதிய பஸ் நிலையத்தோடு தடைபட்டது.

பர்தாவை அணிந்துகொண்டு பஸ் நிலையம் சென்றவர், அங்கு பெண்களோடு பெண்களாக நிற்க அவரிடம் ஒரு பெண் பேச்சுக் கொடுத்துள்ளார்.

WhatsApp_Image_2018-05-12_at_7.42.14_PM_21482  இளைஞரை சிக்கவைத்த காற்று! - விபரீத ஆசையால் விழுந்த தர்ம அடி WhatsApp Image 2018 05 12 at 7ஆனால் முகேஷ் எதுவுமே பேசாமல் அமைதியாக நின்றுள்ளார். மீண்டும் அந்த பெண் பேச்சுக் கொடுத்தும் எதுவும் பேசவில்லை. அந்த நேரத்தில் வேகமாக காற்று அடிக்க, முகேஷின் முகத்தை மூடியிருந்த துணி பறந்தது.

இதனால், பர்தா அணிந்துகொண்டு அருகில் நிற்பவர் ஆண் என்பது தெரிந்து, அவர் அருகில் இருந்த பெண்கள் திருடன் திருடன் என கூச்சலிட்டனர். இதையடுத்து, அங்கு கூடியிருந்த இருந்த மக்கள் முகேஷை பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

முகேஷிடம் போலீஸ் விசாரணை நடத்தியதில் அவருடைய நீண்ட நாள் ஆசை குறித்து கூறியுள்ளார். முகேஷின் அப்பாவும் அம்மாவும் ஆலையத்தில் ஊழியம் செய்வதாகச் சொல்ல அவர்களை அழைத்து முகேஷுக்கு புத்திமதி சொல்லி அனுப்பி போலீஸார் அனுப்பி வைத்தனர்.