தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது – திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்

தனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என திவாகரனுக்கு சசிகலா தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை: டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது தனி அணி தொடங்கியுள்ள திவாகரன், முதல்வர் – துணை முதல்வர் அணிக்கு ஆதரவாக பேசி வருகிறார். இதனால், தினகரன் – திவாகரன் இடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டது. இந்நிலையில், சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் திவாகரனுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், சசிகலா புகைப்படத்தையோ, பெயரையோ எங்கும் பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். உடன்பிறந்த சகோதரி என சசிகலா என ஊடகங்களில் குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் குறித்து திவாகரன் தரப்பில் எந்த கருத்தும் இதுவரை கூறப்படவில்லை.