கிரீமி முட்டை குழம்பு!

வேகவைத்த முட்டை – 4
வெங்காயம் – 1
தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லிதூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
கசூரி மேதி இலைகள் – 2 தேக்கரண்டி
தடித்த தேங்காய் பால் – 3 கப்
கொத்தமல்லி இலை – சிறிது
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
உப்பு – சிறிது

கிரீமி முட்டை குழம்பு,muttai kulambu in tamil,muttai kulambu samayal kurippu

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு வதக்கவும். வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கி பின் பச்சை மிளகாய் சேர்க்கவும். இப்போது மிளகாய் தூள், மல்லிதூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும். பின் தக்காளி, கசூரி மேதி இலைகள் சேர்த்து வதங்கிய பின்னர் தேங்காய்ப் பாலை சேர்த்து கொதிக்க விடவும். இப்போது முட்டை சேர்த்து அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்