எரிபொருட்களின் விலை குறைக்கப்படுமா? என்ன சொல்கிறார் ரணில்

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்த பின்னர் இலங்கையிலும் விலைகளை குறைக்க எண்ணியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி, ஹிக்கடுவை பிரதேசத்தில் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
680 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஹிக்கடுவை பிரதேச செயலகத்தின் நான்கு மாடி கட்டிடத்தை பிரதமர் இன்று பிற்பகல் திறந்து வைத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், உலக சந்தையில் எரிபொருளின் விலைகளை கட்டுப்படுத்த எமக்கு முடியாது. உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கும் போது இங்கும் அதிகரிக்கும்.உலக சந்தையில் விலைகள் குறையும் போது அந்த பயனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்