மாதுளை ஜூஸ் பல்வேறு நோய்களை குணப்படுத்தவும், தடுக்கவும் செய்யும். மாதுளை ஜூஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த ஜூஸில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள், க்ரீன் டீயை விட ஆரோக்கியமானதாக தெரிய வந்துள்ளது.
மாதுளை ஜூஸில் பல்வேறு வகையான புற்றுநோய் மற்றும் கட்டிகளான, புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றை தடுக்கும் பண்புகள் நிறைந்துள்ளது.
மாதுளை ஜூஸ் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். இது இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். மாதுளை ஜூஸைக் குடித்து வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுப்பதோடு சரிசெய்யும்.
சர்க்கரை நோயாளிகள் பழங்களை அதிகம் சாப்பிட பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆனால் மாதுளை பழத்தால் தயாரிக்கப்படும் ஜூஸைக் குடித்தால், அது இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, டைப்-2 சர்க்கரை நோயின் அறிகுறிகளையும் தடுக்கும்.
மாதுளை ஜூஸில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வைத்துக் கொள்ள உதவும். இந்த ஜூஸில் உள்ள ஆன்டி-ஏஜிங் பண்புகள், முதுமை செயல்முறையைத் தாமதப்படுத்தும்.
மாதுளை ஜூஸ் நோயெதிர்ப்பு சக்தியை அளவை அதிகரிக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராடும். முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.
மாதுளை ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செரிமான செயல்பாட்டிற்கு உதவும். மாதுளை ஜூஸில் ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலில் நார்ச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் தடுக்கப்படும்.