வாள்வெட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீர்வேலியில் கோயிலில் கடந்த திங்கட்கிழமை வாள்வெட்டு இடம்பெற்றது.
மறுநாள் வாள், மோட்டார் சைக்கிளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் தேடப்படுகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் சிறப்புப் பொலிஸ் பிரிவினர் 2 பேரை நேற்றுக் கைது செய்தனர்.
சாவகச்சேரியைச் சேர்ந்த அவர்கள் 21,28 வயதுடையவர்கள். விசாரணைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.