கோடை காலத்தில்தான் குளிர்சாதனப் பெட்டியின் பயனை நாம் முழுவீச்சில் அனுபவிப்போம். அவ்வாறு குளிர்சாதனப் பெட்டியை முழு மூச்சாகப் பயன்படுத்தும் அதேவேளையில் கோடையில் அதை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றியும் தெரிந்துகொள்வோம்.
முதலில் குளிர்சாதனப் பெட்டியில் சரியான தட்பவெப்பத்தைப் பேண வேண்டும். இல்லாவிட்டால், உணவில் பாக்டீரியா கிருமிகள் உருவாகிவிடும். இதோ உங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியை நன்றாக பராமரித்துப் பயனடைய சில டிப்ஸ்…
- குளிர்சாதனப் பெட்டியின் குளிர்நிலையை -5 C என்றளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
- ஃப்ரீஸரின் குளிர்நிலையை எப்போதுமே -18 C என்று வைத்திருங்கள்.
- குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவுப் பொருட்களை சிறிய டப்பாக்களில் சரிசமமாக பிரித்து வையுங்கள். சிறிய பாத்திரங்களில் வைப்பதால் சரிசமமான அளவில் குளிர்ச்சி உணவுப் பதார்த்தங்களுக்கு கிடைக்கும்.
- நீங்கள் பழங்களை அரிந்துவிட்டால் அதனை உடனடியாக உட்கொள்வதே சிறப்பு. பழஜூஸ் வகைகளுக்கும் இதுதான் விதி. இருப்பினும், நீங்கள் அதை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க விரும்பினால் மூடியுள்ள டப்பாக்களில் வைக்கவும். குறைந்த காலத்துக்கு அதை அப்படித் தேக்கிவைக்கலாம்.
- சமைத்த உணவை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது அதை நன்றாக ஆறவைத்து வைக்க வேண்டும். மேலும், அந்த உணவு என்று தயாரிக்கப்பட்டது என்பதை லேபிள் செய்து வைப்பது இன்னும் நலமான வழிமுறை.
- குளிர்சாதனப் பெட்டியில் உள்ள அடுக்குகளில் மேல் வரிசையில் சமைத்த உணவையும் கீழ் அடுக்கில் மற்ற சமைக்கப்படாத உணவு வகைகளையும் வைக்கவும்.
- இறைச்சி வகைகளை ஃப்ரீஸரில் மட்டுமே வைக்கவும்.
- ஏற்கெனவே சமைக்கப்பட்ட பிரெஞ்சு ப்ரைஸ், டிக்கி போன்ற உணவுகளையும் ப்ரீஸரிலேயே வைக்கவும்.
- குளிர்சாதனப் பெட்டியில் மெட்டல் கன்டெய்னர்களில் உணவுப் பொருட்களை வைத்தால் அதன் சுவை மாற வாய்ப்புள்ளது. அதனால் குளிர்சாதனப் பெட்டிகளில் வைப்பதற்கென்றே இருக்கும் பிரத்யேக கன்டெய்னர்களில் உணவுப் பொருட்களை வைக்கவும்.
- பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களை வைத்தால் அந்த பைகள் சில நாட்களில் வெடிக்க வாய்ப்புள்ளது. அதனால், குளிர்சாதனப் பெட்டிகளுக்கு என தயாரிக்கப்பட்ட பைகளில் உணவுப் பொருட்களை ஸ்டோர் செய்வது நலம்.
இங்கே மேற்கூறிய 10 டிப்ஸ்களைப் பயன்படுத்தினாலே போதும் நம் வீட்டு குளிர்சாதனப் பெட்டியை ஓரளவு சரியாக பராமரிக்க முடியும். அதேபோல், உணவுகளையும் கிருமி தொற்றாதவாறு பாதுகாக்க முடியும்.